ஃபேர்பிரைஸ்

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஊழியரணி உறுப்பினர்கள், ‘லிங்க்’ உறுப்பினர்கள் ஆகியோர் கட்டுப்படியான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவ ஃபேர்பிரைஸ் குழுமம் $4.5 மில்லியனுக்கும் அதிக மதிப்பிலான விலைக் கழிவுகளை வழங்கவுள்ளது.
என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமம், ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு நோன்பு துறப்பதற்கான அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கவிருக்கிறது.
சிங்கப்பூரில் மொத்தம் 159 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் உள்ளன.
தீவு முழுவதிலும் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வரும் ஜனவரி 18ஆம் தேதியிலிருந்து சீனப் புத்தாண்டு காலம் வரை 13 பிரபல கடல் உணவுகளும் காய்கறிகளும் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்கப்படும் என ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை தெரிவித்தது.
ஒரே பரிவர்த்தனையில் $80 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருள்கள் வாங்குவோருக்கு $8 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அண்மையில் அறிவித்திருந்தது.