செயற்கை நுண்ணறிவு

வரும் மாதங்களில் வர்த்தகச் சூழல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அதிகமான உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக வெவ்வேறு கருத்தாய்வுகளில் தெரியவந்துள்ளது.

தமிழ் ஆர்வமும் போட்டித்தன்மையும்மிக்க நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுகியகாலத்தில் செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கூறுகளைக் கற்று, காணொளி தயாரிக்கும் போட்டி ஒன்றில் குழுக்களாகப் பொருதினர்.
இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவை ஒட்டி அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு நடத்தும் ‘ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு” என்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் இறுதி அங்கம் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த தகவல்களை சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் பகிர்ந்துகொள்ளலாம் என்று எஸ்டோனியாவின் கல்வி, ஆய்வு அமைச்சர் திருவாட்டி கிறிஸ்டினா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
உள்துறைக் குழு அதிகாரிகள் 2025ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு அவதாரங்களுடன் (அவதார்) பாவனைப் பயிற்சிகளைப் பெறலாம்.