கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 233 வட்டப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. மேலும், வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
கோட்டயம்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று தொடங்கியது.
பெங்களூரு: பாஜக மேலிடம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததை அடுத்து கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லாரி நகரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ 5.60 கோடி மதிப்பிலான ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகள், 68 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.