‘பாமகவுக்கு ரூ.300 கோடி பணம்’

சென்னை: அதிமுக கூட்டணியில் சேர பாமகவுக்கு ரூ.300 கோடி வழங்கப்பட்டதாகக் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார். அதிமுக மெகா கூட்டணியை அமைத்ததால் திமுகவினர் தாங்கமுடியாத வேதனையுடன் அவதூறு பரப்பும் விதமாக பொய்க் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எடுபடாது என்று ஜெயகுமார் கூறினார்.