ஒரே கல்லில் இரு மாங்காய்:  தினகரன் வெற்றி வியூகம்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைச் செயலாளர் தினகரன், தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குவதோடு வேட்பாளர் பட்டியலையும் வெளியிடவுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக் கான தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட நிலையில் தமிழகத்தில் 6 முனைப் போட்டி என்பது முடி­வாகிவிட்டது.
திமுக, அதிமுக இரு கட்சி­களும் மெகா கூட்டணியைக் கட்டமைத்துள்ளன. அதோடு தினகரனின் அமமுகவும் ஒரு அணியாக தேர்தலில் களம் காண வுள்ளது
எஸ்டிபிஐ கட்சியோடு அமமுக கூட்டணி வைத்துள்ளது. அதோடு தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல் முருகனும் தினகரனோடு இணைய வாய்ப்புள்ளது. இந்த இரு கட்சிகளின் துணையோடு அமமுக களம் காண உள்ளது.
தமிழகத்தில் மக்கள­வைத் தேர்தலுடன் சேர்த்து காலி யாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதி களுக்கு மட்டும் தேர்தல் நடை பெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடை பெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்­கான இடைத்தேர்தலில் பத்துக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
தற்போது இடைத்தேர்தல் நடை பெறும் தொகுதிகளில், திருப் போரூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம், ஓசூர் ஆகிய தொகுதி­களில் பாமகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.
இந்தத் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ள­தால் வடமாவட்டங்களில் பாமக வுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் கொடுத்து அதிமுக கூட்டணியை உறுதி செய்ததாக தகவல் வெளியாகியது.
வடமாவட்டங்களைப் போலவே, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பரமக் குடி, மானாமதுரை, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர் ஆகிய 7 தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வட மாவட்டங்களைப் போலவே, தென்மாவட்டங்களில் உள்ள ஏழு தொகுதிகளின் இடைத்தேர்தலும் அதிமுகவுக்கு மிக முக்கியம். தென் மாவட்டத் தொகுதிகளைப் பொறுத்தவரை தினகரனின் அமமுகவுக்குக் கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி உள் ளது.
தேனி மக்களவைத் தொகுதிக் குட்பட்ட ஆண்டிப்பட்டி, பெரிய­குளம் சட்டப்பேரவைத் தொகுதி களில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தவிர பரமக்குடி, மானாமதுரை, நிலக்­கோட்டை ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அதுபோலவே, விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சாத்தூரிலும், தூத்துக்குடி தொகுதி மக்களவைத் தொகுதிக் குட்பட்ட விளாத்திகுளம் சட்டப் பேரவைத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
எனவே தென்மாவட்டங்களில் தங்களுக்குக் கணிசமான வாக்கு வங்கியுள்ள தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தினகரன் தரப்பு முடி வெடுத்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இதன்மூலம் அந்த மக்கள வைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், அதற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக அரசு தொடராமல் தடுக்க முடியும் எனத் தினகரன் நம்புவதாகத் தெரிகிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங் காய் என்பது போல மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதுடன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக அரசுக்கு நெருக்கடி தர முடியும். எனவே தென்மாவட்ட தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தங்கள் கட்சி நிர்வாகி­களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ள­தாகத் தெரிகிறது. அதற்கு ஏற்ப அமமுகவின் வியூகம் மற்றும் பிரசாரங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!