சுடச் சுடச் செய்திகள்

கடைசிநேரத்தில் மோடி சலுகை: தயாநிதி தாக்கு

சென்னை: முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அதிமுக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார். 
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார் பாக மத்திய சென்னை தொகுதி யில் போட்டியிடும் அவர், நேற்று முன்தினம் அக்கூட்டணியின் செயல்வீரர்கள்  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலின் முடிவு காரண மாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி என்றார். 
“நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தியாவின் தலையெழுத்து மாற உள்ளது. இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழகத்திற்கு இனி முதலி டம் தரப்படும் என்ற நம்பிக் கையோடு செயல்படுகிறோம். 
“தமிழகத்தில் ஆட்சி மாற்றத் துக்குப் பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராவார். அச்சமயம் தமிழகம் கண்டிப்பாக முன்னேறும்” என்றார் தயாநிதி மாறன். 
மத்தியில் கேடி ஆட்சி நடை பெறுவதாகவும் மாநிலத்தில் அடிமை ஆட்சி உள்ளது என்றும் விமர்சித்த அவர், இரண்டுக்குமே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண் டும் என வலியுறுத்தினார்.
“ஆட்சிக் காலம் முடிகின்ற தருணத்தில் பிரதமர் மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு கிறார். ஐந்து ஆண்டு காலத்தில் மத்திய அரசு எந்த உருப்படியான திட்டத்தையேனும் கொண்டு வந்ததா? 
“தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தது கலைஞர் கருணாநிதிதான். இத் திட்டதைச் செயல்படுத்தியவர் மு.க. ஸ்டாலின். ஏழு தமிழர் விடு தலை தொடர்பாகவும், பொள்ளச்சி விவகாரத்திலும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை,” என தயாநிதி மாறன் மேலும் தெரிவித்தார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon