டெங்கி: சென்னையில் இருவர் பலி

சென்னை: சென்னையில் டெங்கி காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும் 531 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏடிஸ் கொசு உற்பத்தியைக் கட்டுப் படுத்தாத 449 வீட்டு உரிமையாளர்களுக்கு 898,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.