கார்த்தி சிதம்பரம்: தமிழக அரசுதான் காரணமே தவிர என் தந்தையல்ல

சிவகங்கை: சிவகங்கை வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கான முழு முக்கிய காரணமே தமிழக அரசுதானே தவிர என் தந்தை அல்ல என்று தனது மௌனம் கலைத்து ஊடகங்களிடம் பேசியுள்ளார் காங்கிரசின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு முதல் குடியுரிமை சட்டத்திருத்த விவகாரம் வரையிலான பல்வேறு கேள்விகளுக்கும் கார்த்தி சிதம்பரம் சுடச்சுட பதில் அளித்துள்ளார்.

“2021ல் தமிழ்நாட்டில் அதிசயம் நடக்கும் என ரஜினிகாந்த் கூறி யிருக்கலாம். ஆனால் அந்த அதி சயம் நடப்பதற்கு முன்பாக அரசியல் குறித்தோ, நாட்டின் பிரச்சினைகள் குறித்தோ ஏதாவது ஒரு கருத்தை அவர் சொல்லவேண்டும்.

“இதன்பின்னரே அதிசயத்தை குறித்து அவர் பேசவேண்டும்.

“குடியுரிமை சட்டத்துக்கு ரஜினி ஆதரவா, இல்லையா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அவரது நிலைப்பாடு என்ன? ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை குறித்து அவரது கருத்து என்ன என்பது பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது.

“அவர் என்றைக்கு ஒரு கருத்தை ஆணித்தரமாக சொல்கிறாரோ அன்றுதான் அவர் நினைக்கும் அதிசயம் நடக்கும்.

“பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்கள் இரண்டாம் ரக குடிமக்கள் என்பதுபோல் ஒரு செய்தியைப் பரப்பிவருகிறது.

“குடியுரிமை சட்டத் திருத்தத் தால் இன்று நேரடியாக இஸ்லாமிய சமூகத்தினரிடையே பாதிப்பு ஏற்படாவிட்டாலும் பிற்காலத்தில் படிப்படியாக அவர்கள்மீது இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

“ஐம்பது வருடமாக காங்கிரஸ் ஆட்சி அமைக்காததால் எங்களுக்குள் மனக்குமுறல் உள்ளது.

“அதற்காக திமுகவின் கிளை கழகமாக காங்கிரஸ் மாறிவிட்டது என்பதெல்லாம் தவறான பார்வை.

“தமிழ்நாட்டில் ஏன் ஒரு எம்பி, எம்எல்ஏ கூட பாஜகவில் இல்லை? டுவிட்டர், ஃபேஸ்புக் மூலமாக கட்சியை வளர்த்து வருகிறது பாஜக. இதனால் ஒரு பயனுமில்லை.

“மத்திய அரசாங்கம் பாஜகவின் கையில் உள்ளது. அவர்கள் சொல்வதை மாநில அரசு கேட்கிறது. பின்னர் நெல்லை கண்ணனைக் கைது செய்துதானே ஆகவேண்டும்.

“இருப்பினும் பொதுமேடையில் நெல்லை கண்ணன் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. அது தவறு. எங்கள் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும் பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து ஒருவர் அப்படி பேசக்கூடாது.

“சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிறகு என்னால் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை 90% சரிசெய்வது மாநில அரசின் கடமையாகும்.

“ஒரு வருடத்துக்கு ஒரு எம்பியின் செயல்பாட்டுக்கு வரும் நிதியானது 5 கோடி. அதைக்கொண்டு 6 தொகுதிக்கு மின்விளக்குகள், சமுதாயக் கூடம் கட்டித்தரலாம். மக்களின் குறைகள் குறித்து பரிந்துரை செய்யலாம். அதை முறையாக செய்துவருகிறேன்.

“எனது தந்தை சிவகங்கை தொகுதியில் 7 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அங்கு நிறைய நற்பணிகளைச் செய்து மக்கள் செல்வாக்கை பெற்றதால்தான் அத்தனை முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளார்.

“இது தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் பெரிய சரித்திரம். அவர் செய்த சாதனைகளை சொல்ல இது நேரமல்ல. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு ஒரு எம்பியாக என்ன செய்யவேண்டுமோ அதை என் தந்தையும் செய்துள்ளார், நானும் செய்வேன்,” என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!