தந்தை-மகன் உயிரிழப்பு விசாரணை தீவிரம்

தமிழக மக்களை மட்டுமின்றி இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின்படி, ‘சந்தேக மரணம்’ என சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிபிசிஐடி எஸ்.ஐ. உலக ராணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஜெயராஜ், பென்னிக்சின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்களிடமும் துருவித் துருவி கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சாத்தான் குளத்தில் உள்ள கடைவீதி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பிறகு, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், எஸ்.ஐ சரவணன் ஆகியோர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சிபிசிஐடி அதிகாரிகள் விரைந்தனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பதிவாளர் பாரதிதாசன் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்தினார். அங்கு 2வது நாளாக தடய அறிவியல் துறை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக சாத்தான்குளம் போலிஸ் நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு ஆவணங்களைப் பாதுகாக்க தாசில்தார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே, சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் பதிவாளர் பாரதிதாசனுக்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், தந்தை, மகனை சித்திரவதை செய்து கொன்றதை மனித இனமே எதிர்ப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரிக்க வந்த பதிவாளர் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறை அதிர்ச்சி அளிப்பதாகவும் சத்தியமாக இதைச் #சும்மா_விடவே_கூடாது என்றும் 'ஹேஷ்டேக்' மூலம் ரஜினி தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 58, அவரது மகன் பெனிக்ஸ், 31. கடந்த 20ஆம் தேதி ஊரடங்கு விதியை மீறி கடை யைத் திறந்து வைத்தது தொடர்பாக இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து அடித்துத் தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிர் இழந்ததாகச் சொல்லப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!