வானொலிப் பெட்டியில் வெடி வைத்து சதி; எதிர்பாராத விதமாக 12 வயது சிறுமியும் உயிரிழப்பு

சேலம் பனமரத்துப்பட்டி அருகே தும்பிப்பட்டியை சேர்ந்த விவசாயி மணி என்கிற மாரிமுத்து கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே கிடந்த வானொலிப் பெட்டியை எடுத்து வந்து அதற்கு மின் இணைப்பு கொடுத்து பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அது திடீரென வெடித்து சிதறியதால் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். 

இந்த சம்பவத்தில் மணியின் 12 வயது பேத்தி சவுரதியும் மேலும் மூவரும் படுகாயம் அடைந்தனர். 

சிறுமி சவுரதியின் குடல் சரிந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிறுமி சவுரதி, 12 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் தொடர்பில் மணியின் அண்ணன் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 விவசாய நிலத்திற்கான வழித்தட தகராறில் சொந்த அண்ணனைக் குறி வைத்து வானொலிப் பெட்டியில் வெடிகுண்டு வைத்து வெங்கடேசன் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!