பாதிப்பு கூடியது; குணமடைவதும் அதிகரிப்பதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறத்தில் கணிசமான அளவில் இத்தொற்றில் இருந்து குணமடைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை ஒரேநாளில் 3,680 பேருக்கு கிருமித்தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்தது. பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது.

இத்தொற்றில் இருந்து 82,324 பேர் குணமடைந்தனர். சென்னையில் இதுவரை 74,969 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதால் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.