படப்பிடிப்பை நடத்தலாம்; ஆனால் திரையரங்குகள் இயங்காது தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்கும்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து மாதங்­க­ளாக பெரும் அவதிப்பட்டு வந்த தமிழக மக்களின் 90% இயல்பு வாழ்க்கை, முதல்வர் பழனிசாமியின் ஊரடங்கு தளர்வு அறிவிப்பால் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பத் தொடங்கி உள்ளது.

“பேருந்து சேவைகள் இன்று முதல் இயங்கும். ‘இ-பாஸ்’ அனு­மதி முறை ரத்து செய்­யப்­பட்டு, அனைத்­து வழி­பாட்­டுத் தலங்­களும் திறக்­கப்­ப­டும்,” என்று முதல்வர் அறிவித்துள்ளதால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா கிரு­மித்­தொற்று மக்­கள் மத்­தி­யில் பர­வா­மல் முறி யடிக்க மாநி­லம் எங்­கும் பொது முடக்­கம் அம­லில் இருந்து வந்­தது.

இந்நிலை­யில், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்­வு­களை முதல்­வர் பழ­னி­சாமி அறி­வித்து உள்­ளார்.

முக்கிய தளர்வுகள்:

“சென்னை உள்­பட தமி­ழ­கம் முழு­வ­தும் இன்­று­ மு­தல் மாவட்­டத்­திற்­குள்­ளான அரசு, தனி­யார் பேருந்து சேவை­கள் மீண்­டும் வழக்­கம்­போல் இயங்க உள்­ளன.

“கடந்த இரு மாதங்­க­ளாக ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் முழு ஊர­டங்கு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், அந்த உத்­த­ர­வும் விலக்­கிக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

“இதே­போல, சினிமா படப்­பி­டிப்­பிற்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதேசம­யம் 75 பேருக்கு மேல் ஒரே நேரத்­தில் பங்கேற்கக் கூடாது, பார்­வை­யா­ளர்­க­ளுக்கும் அனு­மதி இல்லை போன்ற நிபந்­த­னை­களும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

“அனைத்து வகை உண­வ­கங்­கள், தங்­கும் விடு­தி­கள், அலு­வ­ல­கங்­களைத் திறக்கவும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

“வங்­கி­களும் அதனை சார்ந்த நிறு­வ­னங்­களும் 100% பணி­யா­ளர்­க­ளு­டன் இயங்க அனு­மதி அளித்­துள்ள தமி­ழக அரசு, அரசு அலு­வ­ல­கங்­களும் இன்று முதல் 100% பணி­யா­ளர்­க­ளு­டன் இயங்­க­லாம்,” என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் மாவட்­டங்­க­ளுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொது­மக்­கள் பய­ணிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், நீல­கிரி மாவட்­டத்­துக்கு சுற்றுப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்­கும் என்பதால், அங்கு வருவதற்கு மட்­டும் கட்­டா­யம் ‘இ-பாஸ்’ தேவை என இம்மாவட்ட ஆட்­சி­யர் இன்­ன­சன்ட் திவ்யா தெரி­வித்­துள்­ளார்.

முக்கிய கட்டுப்பாடுகள்:

தமி­ழ­கத்­தில் செப்­டம்­பர் 30ஆம் தேதி நள்­ளி­ரவு வரை தளர்­வு­க­ளு­டன் ஊர­டங்கை நீட்­டித்­துள்ள தமி­ழக அரசு சில கட்­டுப்­பா­டு­க­ளை­யும் விதித்­துள்­ளது.

“மாநி­லம் முழு­வ­தும் 144 தடை உத்­த­ரவு தொட­ரும். இத­னால், பொது இடங்­களில் ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது.

“பிற மாநி­லங்­கள், மாவட்­டங்­களில் இருந்து வரு­வோ­ருக்கு இ-பாஸ் அவ­சி­யம்.

“இதே­போல, திரை­ய­ரங்­கு­கள், நீச்­சல் குளங்­கள் கடற்­கரை, உயி­ரி­யல் பூங்கா, அருங்­காட்­சி­ய­கங்­கள், சுற்­று­லாத் தலங்­களைத் திறப்பதற்கும் தடை நீடிக்கிறது.

“மத, சமு­தாய, அர­சி­யல், பொழுது­போக்கு, கலா­சார விழாக்­கள், பொதுக்­கூட்­டங்­கள் மற்­றும் ஊர்­வ­லங்­க­ளுக்கு தடை நீட்­டிப்பு செய்­யப்­பட்­டுள்­ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!