ஸ்டாலின் முதல்வராக வேண்டி குலதெய்வ கோயிலை சீரமைக்கும் துர்கா

நாகை: வருங்காலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று வேண்டி அவரது மனைவி துர்கா தனது குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை சீரமைத்துக் கட்டி வருகிறார்.

வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதலை நிறைவேற்றக் கோரி முக்கிய கோயில்களில் வழிபாடு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் குல தெய்வமான அங்காளம்மன் கோயில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்றுவரும் துர்கா அந்தக் கோயிலைப் புதுப்பித்து வருகிறார்.

அண்மையில் கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டும் பணிகளை தன் குடும்பத்தினருடன் சென்று அவர் பார்வையிட்டார்.

வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே முகக்கவசம் அணிந்தபடி கோயில் புதுப்பிப்புப் பணிகளை துர்கா பார்வையிடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதில், கட்சிப் பிரமுகர் ஒருவர் “கோயில் பணிகளை நீங்கள் ேநரில் வந்து பார்வையிட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று துர்காவிடம் கூறுகிறார்.

“நீங்கள் சிறியதாக ஆரம்பித்த கோயில் பணி ஆலமரமாக வளர்ந்து வருகிறது.

“அஸ்திவாரத் துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன,” என்றும் அந்த பிரமுகர் தெரிவிக்கிறார்.

குடும்ப ஜோதிடரின் அறிவுரைப் படி குல தெய்வம் கோயிலை துர்கா சீரமைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக பழநி, திருச்செந்துார் முருகன் கோயில்களில் பௌணர்மி நாளில் வழிபாடு நடத்தவும் துர்கா திட்டமிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!