கடத்தப்பட்ட கணவரை மீட்டுத் தரக்கோரி சாகும்வரை பெண் உண்ணாவிரதப் போராட்டம்

வேதா­ரண்­யம்: வேதா­ரண்­யத்­தில் அண்­மை­யில் திரு­ம­ண­மான பெண், உற­வி­னர்­க­ளால் கடத்­தப்­பட்ட தனது கண­வனை மீட்­டுத் தரும்வரை தான் உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் நடத்­தப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளார். இதற்கு அவ­ரது உற­வி­னர்­களும் ஆத­ரவு தெரி­வித்து போராட்­டத்­தில் ஈடுபட்­ட­னர்.

வேதா­ரண்­யம், பஞ்­ச­ந­திக்­கு­ளம் கிரா­மத்­தைச் சேர்ந்த சும­தி­யும் அதே கிரா­மத்­தைச் சேர்ந்த செல்­வ­கு­மா­ரும் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக காத­லித்து வந்துள்ளனர்.

இந்நிலை­யில், மலே­சி­யா­வில் வேலை செய்து வந்த செல்­வ­குமார் கடந்த 16ஆம் தேதி கிராமத்துக்கு திரும்­ப, 17ஆம் தேதி இருவரும் திரு­ம­ணம் செய்­துள்­ள­னர்.

இதற்கு செல்­வ­கு­மா­ரின் பெற்­றோர்­கள் எதிர்ப்பு தெரி­வித்த நிலை­யில், கிராம பஞ்­சா­யத்து தலைவர்கள் இரு­வ­ருக்­கும் 18ஆம் தேதி வேதா­ரண்­யத்­தில் வைத்து பதிவுத் திரு­ம­ணம் செய்து வைக்க முடிவு செய்திருந்ததாகவும், அதன்­படி பதி­வுத் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தற்­காக வந்த செல்­வ­குமாரை அவ­ரு­டைய உற­வி­னர்­கள் கடத்திச் சென்றுவிட்­ட­தாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சுமதி, வேதா­ரண்­யம் காவல்­நி­லை­யத்­தில் புகார் செய்­தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படா­த­தால், உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

காவல்­து­றை­யி­னர் செல்­வ­குமாரை மீட்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை எடுப்­ப­தாக உறுதி அளித்து போராட்டத்தை கைவிடும் படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

தனது கண­வரை மீட்­டுத்­ த­ரக்கோரி உற­வி­னர் ­க­ளு­டன் வேதா­ரண்­யம் தாலுகா அலு­வ­ல­கம் முன்பு உண்­ணா­வி­ர­தப் போராட்டம் நடத்தும் பெண்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!