தமிழகத்தில் கொரோனாவின் கொட்டம் ஒடுங்குகிறது: நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆட்டம்

தமிழகத்தில் கொரோனாவின் கொட்டம் ஒடுங்குகிறது: நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆட்டம்

1 mins read
2fcf5c99-cb09-4d06-b223-a07c0cb89308
கிருமிப் பரவல் நேரத்தில் கட்டுப் பாடுகளைப் பின்பற்றாமல்வாகனத்தில் செல்வோருக்கு முகக்கவசம் அணிந்துவிடும் இயக்கத்தை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் போலிசார் நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு போலிசார் முகக் கவசம் அணிவித்து விழிப்புணர்வூட்டினர். படம்: ஏஎஃப்பி -

தமி­ழக அர­சின் சுகா­தா­ரத் துறை, கொரோனா கிரு­மிப் பர­வ­லின் ஞாயிற்­றுக்­கி­ழமை (டிசம்­பர் 20) அறிக்­கை­யாக வெளி­யிட்­டது. மாநி­லம் முழு­வ­தும் அன்­றைய தினம் 1,114 பேருக்­குப் புதி­தா­கத் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. இதை­யும் சேர்த்து, தொற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 8 லட்­சத்து 6,891ஆக உயர்ந்­தது.

குறிப்­பாக, சென்னை (325 பேர்), செங்­கல்­பட்டு (81 பேர்), திரு­வள்­ளூர் (57 பேர்), திருப்­பூர் (52 பேர்) ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளைத் தவிர மற்ற மாவட்­டங்­களில் 50க்கும் குறை­வா­ன­வர்­க­ளுக்கே புதி­தாக கிருமி தொற்­றி­யது.

மாநி­லம் முழு­வ­தும் மருத்­து­வ­ம­னை­களில் இருந்து 1,198 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். இது­வரை 7 லட்­சத்து 85,315 பேர் குணம் அடைந்­துள்­ள­னர். கொரோ­னாவால் ஞாயிற்­றுக்­கி­ழமை 15 பேர் உயி­ரி­ழந்­த­னர். இவர்­க­ளை­யும் சேர்த்து பலி­யா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 11,983 ஆகி­யுள்­ளது.