‘இந்திரா காந்தியாக உருவெடுத்த பிரியங்கா’

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வன்­மு­றை­யால் உயி­ரி­ழந்த விவ­சா­யி­க­ளின் குடும்­பத்­தா­ரைச் சந்­திக்­கச் சென்ற பிரி­யங்கா காந்தி கைது செய்­யப்­பட்­டார்.

இதையடுத்து, வன்முறை நிகழ்ந்த லக்­கிம்­பூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், பாதிக்­கப்­பட்­ட­வர்­களைச் சந்­திப்­பதில் எந்­தத் தவ­றும் இல்லை என்­றும் தாம் ஏதோ குற்­றச்­செ­ய­லில் ஈடு­ப­டு­வதுபோல் போலி­சார் தடுத்து நிறுத்­தி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

போலி­சா­ரி­டம் அவர் மிகுந்த ஆவே­சத்­து­டன் வாதி­டும் காட்சி அடங்­கிய காணொ­ளிப் ­ப­திவு இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது. ஒரு பெண்­ணைக் கைது செய்ய உரிய உத்­த­ரவு தேவை இல்லையா? என்று பிரி­யங்கா கேள்வி எழுப்­பி­னார்.

"இது விவ­சா­யி­க­ளின் பூமி. பாஜக­வின் பூமி அல்ல. என்­னைக் கைது செய்­வ­தற்­கான உத்­த­ரவு இருக்­கி­றதா? இல்­லை­யெ­னில் போலி­சார் மீது கடத்­தல் புகார் அளிப்­பேன்," என்­றார் பிரி­யங்கா.

இதை­ய­டுத்து, அவர் விடுதி ஒன்­றில் தடுத்துவைக்­கப்­பட்­டார். அப்­போது தாம் அடைக்­கப்­பட்­டி­ருந்த அறையை துடைப்­பம் கொண்டு அவர் சுத்­தப்­ப­டுத்­தி­னார். இது தொடர்­பான காணொ­ளிப்­ ப­திவு ஒன்று சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், பிரி­யங்­கா­வின் துணிச்­சல் காவல்­து­றை­யி­னரை மிரள வைத்­த­தாக ராகுல் காந்தி டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

"பிரி­யங்கா, நீங்­கள் பின்­வாங்­கப்போவ­தில்லை என்­பது எனக்­குத் தெரி­யும். உங்­க­ளு­டைய தைரி­யத்­தைக் கண்டு அவர்­கள் அஞ்­சு­கின்­ற­னர். நீதிக்­காக நடக்­கும் இந்த வன்­மு­றை­யற்ற போராட்­டத்­தில் நாட்­டுக்கே உணவு வழங்­கு­வோர்க்கு வெற்றி கிடைக்க வேண்­டும்," என்று ராகுல் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, பிரி­யங்­கா­வின் துணிச்­சலை காலஞ்­சென்ற பிர­த­மர் இந்­திரா காந்­தி­யு­டன் ஒப்­பிட்டு, காங்­கி­ர­சார் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

கடந்த காலத்­தில் ஜனதா தலை­மை­யி­லான மத்­திய அரசு இந்­திரா காந்­தி­யைக் கைது செய்­ததை, பிரி­யங்­கா­வின் கைது சம்­ப­வத்­து­டன் ஒப்­பிட்­டுள்­ளார் பஞ்­சாப் காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் சுனில் ஜாக்­கர்.

"கடந்த 1997, அக்­டோ­பர் 3ஆம் தேதி ஜனதா அரசு இந்­திரா காந்­தி­யைக் கைது செய்­தது தவறு என நிரூ­ப­ண­மா­னது. அதேபோல் 2021 அக்­டோ­ப­ரில் பிரி­யங்கா கைது செய்­யப்­பட்­ட­தன் மூலம் பாஜக ஆட்­சி­யின் முடிவு தொடங்­கி­விட்­டது," என்று சுனில் ஜாக்­கர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!