வெளிநாடு வாழ் சிறாருக்குத் தமிழ் கற்பிக்க தமிழ்நாடு அரசு திட்டம்

சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா சீனா, உள்­ளிட்ட தமி­ழ­ர்­கள் வசித்­து­வ­ரும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட நாடு­க­ளைச் சேர்ந்த தமி­ழர்­களின் குழந்­தை­களுக்­குத் தமிழ் மொழி­யைப் போதிக்க தமி­ழக அரசு திட்­ட­மிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழை இரண்­டாம், மூன்­றாம் மொழியாக கற்­பிக்க அரசு முடிவு செய்­துள்­ள­தாக தமி­ழக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­து உள்­ளன.

இந்­தத் திட்­டத்­தை­யொட்டி தமிழ் இணை­யக் கல்­விக்­க­ழ­கத்­தில் பாடத்­திட்­டங்­கள் உரு­வாக்­கம், பாடல்­கள் எழு­து­தல், பயிற்சி வகுப்­பு­கள், மாண­வர்­க­ளின் திறன் அறிதல் முத­லா­னவை குறித்து தக­வல்­கள் திரட்­டப்­பட்டு வரு­கின்­றன.

அனு­ப­வம் வாய்ந்த ஆசி­ரி­யர்­களின் விவ­ரங்­க­ளை­யும் சென்­னை­யில் உள்ள தமிழ் இணை­யக்­ கல்­விக்கழ­கத்­திற்கு அனுப்பிவைக்­கும்­படி மெட்­ரிக் மேல்­நிலைப்­பள்ளி முதல்­வர்­கள், தாளா­ளர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரிவித்தன.

பள்­ளி­ கல்­வித்­துறை, அந்­தந்த மாவட்ட முதன்­மைக் கல்வி அலு­வலர்­கள் ஆகி­யோர் மூலம் அவர்­களுக்குச் சுற்­ற­றிக்ைக அனுப்பிவைக்­கப்­பட்­டுள்­ளதாக தமிழக கல்­வித்­துறை அதி­கா­ரி­களை மேற்­கோள்காட்டி ஊட­கங்­கள் கூறின.

வெளி­நாடு வாழ் தமி­ழர்­க­ளின் குழந்தை­கள் தமிழ்­மொ­ழியைக் கற்க இதன் மூலம் நல்ல வாய்ப்பு ஏற்­படும் என்­றும் அதிகாரிகள் நம்­பிக்கை தெரி­வித்துள்ளனர்.

தமி­ழக அரசு அமைத்­துள்ள தமிழ் இணை­யக் கல்­விக்­க­ழ­கம் 2000ஆம் ஆண்டு முதல் செயல்­பட்டு வரு­கிறது. இதன் இணை­யத்­த­ளம் 2001ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. தமிழ் இணை­யப் பல்­கலைக்­க­ழ­கம் என்று முன்பு இந்­தக் கழ­கம் குறிப்­பி­டப்­பட்­டது.

தமிழ்­மொழி, இலக்­கி­யம், பண்­பாடு முத­லா­ன­வற்றை இணை­யம் வழி­யாக புலம்­பெ­யர்ந்த தமிழ்ச் சமு­தா­யத்­திற்­கும் தமிழ்­மொழி ஆர்வம் உள்­ள­வர்­க­ளுக்­கும் ஆதாரங்­களு­டன் போதிப்­பது இந்­தக் கழ­கத்­தின் நோக்­க­மா­கும்.

இந்­தக் கழ­கம் அரிச்­சு­வடி முதல் பட்­டப்படிப்பு வரை­யி­லான கல்­வித் திட்­டங்­களைப் பல்­வேறு கோணத்­தில் வகுத்து வழங்கி வரு­கிறது.

தமிழ்ப் பண்­பாட்­டுக் கூறு­களை ஆவ­ணப்­ப­டுத்தி அவற்றைப் பாது­காக்­கும் பணி­யை­யும் கழகம் செய்து வரு­கிறது.

தமிழ்ப் பண்­பாட்­டுக் கூறு­கள் தொடர்­பான அரிய பொருட்­க­ளை­யும் ஆவ­ணங்­க­ளை­யும் மின்­னி­லக்க வளங்­க­ளாக மாற்றி இணை­யத்­தில் இது பதி­வேற்றி இருக்­கிறது.

அவற்றை உல­கெங்­கும் இருக்­கக்­கூ­டிய ஆய்­வா­ளர்­கள் பயன்­படுத்தி வரு­கி­றார்­கள். கணி­னித் தமிழ் ஆய்வை ஊக்­கு­விக்க தேவைப்­படும் தமிழ் மென்­பொ­ருட்­களை­யும் கழ­கம் அப்­போ­தைக்கு அப்­போது உரு­வாக்கி வரு­கிறது.

தமிழ் மென்­பொ­ருட்­களைப் பொறுத்­த­வரை இக்கழ­கம்­தான் தமி­ழக அர­சின் முக­வ­ரா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!