வன்னியர் இடஒதுக்கீடு; விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: வன்­னி­யர்­க­ளுக்கு 10.5 விழுக்­காடு உள்‌ ஒதுக்­கீடு வழங்கி கடந்த அதி­முக ஆட்­சி­யில்‌ சட்­டம்‌ இயற்­றப்­பட்­டது.

திமுக தலை­மை­யி­லான ஆட்சி அமைந்­த­தும், இது தொடர்­பான அர­சாணை வெளி­யி­டப்­பட்­டது.

இதற்­கி­டையே இட­ஒ­துக்­கீட்டை எதிர்த்து தொட­ரப்­பட்ட வழக்கை விசா­ரித்த சென்னை உயர் நீதி­மன்­றம், "சாதி வாரி­யான கணக்­கெ­டுப்பை முறை­யாக நடத்­திய பின்­னரே இட­ஒ­துக்­கீட்டை வழங்க வேண்­டும்‌," என்று கூறி வன்­னி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட 10.5 விழுக்­காடு உள்­‌ஒ­துக்­கீட்டை ரத்து செய்ய உத்­த­ர­விட்­டது.

இந்த நிலை­யில் வன்­னி­யர் இட ஒதுக்­கீடு ரத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்று தேமு­திக பொதுச்செய­லா­ளர் விஜ­ய­காந்த் அறைகூவல் விடுத்­துள்­ளார்.

"மிக­வும்‌ பிற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வி­ன­ருக்­கான 20 விழுக்­காடு ஒதுக்­கீட்­டில்‌, வன்­னி­யர்­க­ளுக்கு 10.5 விழுக்­காடு உள்‌ ஒதுக்­கீடு வழங்கி கடந்த அதி­முக ஆட்­சி­யில்‌ சட்­டம்‌ இயற்­றப்­பட்­டது.

"தேர்­த­லுக்­கா­க­வும்‌ கூட்­ட­ணிக்­கா­க­வும்‌ மட்­டுமே இட ஒதுக்­கீடு வழங்­கப்­பட்­ட­தா­கத் தேர்­த­லுக்கு முன்பே நான்‌ சொன்­னது தற்­போது உண்­மை­யா­கி­யுள்­ளது. இருப்­பி­னும்‌ 10.5 விழுக்­காடு உள்‌ ஒதுக்­கீட்டை நீதி­மன்­றம்‌ ரத்து செய்­தி­ருப்­பது வன்­னிய சமூக மக்­க­ளுக்­குப் பெரும்‌ அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே, இட ஒதுக்­கீடு விவ­கா­ரத்­தில்‌ வழங்­கப்­பட்ட தீர்ப்பை மறு­ப­ரிசீ­லனை செய்து, அனைத்­துத் தரப்பு மக்­க­ளும்‌ பய­ன­டை­யும்‌ வகை­யில்‌ தீர்ப்பு வழங்க வேண்­டும்‌," என்று அறிக்­கை­யில் விஜ­ய­காந்த் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதற்­கி­டையே வன்­னி­யர்­க­ளுக்­கான 10.5 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு ரத்து செய்­யப்­பட்­டுள்­ளதை வர­வேற்­றுள்ள முக்­கு­லத்­தோர் புலிப்­படை தலைவர் கரு­ணாசை வன்­னி­யர்­கள் அனை­வ­ரும் புறக்­க­ணிக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்த நிலை­யில் வன்­னி­யர் ­களுக்­கான உள் இட­ஒ­துக்­கீட்டை மீட்­கா­மல் ஓய மாட்­டேன் என்று பா.ம.க. நிறு­வ­னர் ராம­தாஸ் சூளு­ரைத்­துள்­ளார்.

"சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை எண்ணி நீங்­கள் கலங்க வேண்­டாம். உங்­க­ளின் கல்வி மற்­றும் வேலை­வாய்ப்­புக்­கான இட­ஒ­துக்­கீட்டை வென்­றெ­டுத்து கொடுக்க வேண்­டி­யது என் கடமை. அதை நிறை­வேற்­றா­மல் ஓய மாட்­டேன். அதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுப்­போம். வன்­னி­யர் இட­ஒ­துக்­கீட்டை மீட்­டெ­டுப்­போம். கவலை வேண்­டாம். இது­வும்கடந்து போகும்; நீதி வெல்­லும்," என்று தொண்­டர்­க­ளுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் ராம­தாஸ் குறிப் பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!