முருங்கைக்காய், வெண்டைக்காய் விலையும் அதிகரிப்பு

போரூர்: தமி­ழ­கத்­தில் தக்­காளி விலை புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்ள வேளை­யில் முருங்­கைக்­காய், வெண்­டைக்­காய், பீன்ஸ் போன்ற காய்­க­றி­க­ளின் விலை­யும் அதி­ கரித்­துள்­ளது.

சென்னை கோயம்­பேடு சந்­தைக்கு தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்­தும் ஆந்­திரா, கர்­நா­டகா, கேரளா, மகா­ராஷ்­டிரா, உத்­த­ரப்­பி­ர­தே­சம் ஆகிய மாநி­லங்­க­ளி­லி­ருந்­தும் தின­சரி 450 லாரி­கள் நிறைய காய்­க­றி­கள் விற்­ப­னைக்கு வரு­கின்­றன.

இதில் ஆந்­திரா, கர்­நா­டகா மாநி­லங்­களில் இருந்­து­தான் 75 விழுக்­காடு காய்­க­றி­கள் கோயம்­பேடு சந்­தைக்கு வரு­கின்­றன.

ஆனால் அந்தப் பகு­தி­களில் தொடர்ந்து பெய்து வரும் கன­மழை கார­ண­மாக பயி­ரி­டப்­பட்­டி­ருந்த தக்­காளி உள்­ளிட்ட காய்­கறிச் செடி­கள், தோட்­டங்­கள் பெரும்­பா­லும் மழை வெள்­ளத்­தால் அடித்­துச் செல்­லப்­பட்டு சேதம் அடைந்­தது.

உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் சந்­தைக்கு வரும் காய்­க­றி­க­ளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்­து­கொண்டே வரு­கிறது. தின­சரி 70 லாரி­கள் வரை வந்துகொண்­டி­ருந்த தக்­காளி தற்­போது 40 லாரி ­க­ளாக குறைந்­த­தால் விலை அதி­க­ரிக்க தொடங்­கி­யது.

நேற்று 200 லாரி­கள் காய்­க­றி­கள் மட்­டுமே விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. இதன் கார­ண­மாக அங்­கி­ருந்து வரும் தக்­காளி, பீன்ஸ், கத்­தி­ரிக்­காய், வெண்­டைக்­காய், பாகற்­காய் உள்­ளிட்ட காய்­க­றி­கள் வரத்து வெகு­வாகக் குறைந்­து­ விலை அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த இரண்டு நாட்­க­ளா­கவே கோயம்­பேட்­டில் உள்ள சில்­ல­றைக் கடை­களில் தக்­காளி ஒரு கிலோ ரூ.120க்கு விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கிறது.

வெளிச்சந்­தை­யில் மற்றும் காய்­கறி சில்­லறை விற்­ப­னைக் கடை­களில் தக்­காளி விலை ஒரு கிலோ ரூ. 150ஐக் கடந்­துள்­ளது.

இதற்­கி­டையே தக்­கா­ளியைத் தொடர்ந்து பச்சைக் காய்­க­றி­க­ளான பீன்ஸ், அவ­ரைக்­காய், வெண்­டைக்­காய், முருங்­கைக்­காய், பன்­னீர் பாகற்­காய் உள்­ளிட்ட காய்­க­றி­ களின் விலை­யும் கிலோ ரூ. 100ஐத் தாண்டி விற்­ககப்படுகிறது என தமிழக ஊடகமான மாலை மலர் தெரிவித்தது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 120, பீன்ஸ் ரூ100, அவரைக்காய் ரூ. 110, வெண்டைக்காய் ரூ. 100, முருங்கைக்காய் ரூ. 150, முட்டை கோஸ் ரூ. 50 என விற்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!