ஏழு தேநீர்க் கடைகள் தீவிபத்தில் நாசம்

திருச்சி: திருச்சி காந்தி சந்­தை­யில் உள்ள ஒரு தேநீர் கடை­யில் ேநற்று அதி­கா­லை­யில் எரிவாயு உருளை வெடித்து தீவி­பத்து ஏற்­பட்டது. இந்த தீயை உடனடியாக அணைக்க முடியாததால், பக்­கத்­தில் உள்ள ஏழு கடை­க­ளி­லும் தீ பற்றி எரிந்தது.

இதனால், கடை­களில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருட்­கள் எரிந்து நாச­மா­னதாக தக வல்கள் தெரிவித்தன.

இவ்விபத்­தில் சிக்­கியவர்கள் விவ­ரம் தெரிய வரவில்லை.

ஏறக்­கு­றைய 2,000 கடை­க­ளைக் கொண்ட காந்தி சந்தைப் பகுதியில் இருந்து பல்­வேறு மா­வட்­டங்­க­ளுக்­கும் காய்­கறி­கள் உள்­ளிட்ட பொருள் ­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன.

இந்தச் சந்­தை­யின் நுழை­வாயில் பகு­தி­யில் உள்ள தேநீர் கடை­யில் எரி­வாயு உருளை வெடித்­த­தில் விபத்து ஏற்­பட்­டது.

இந்த தீ கட்­டுக்­க­டங்காமல் பர­வி­ய­தால் அரு­கில் ­இ­ருந்த தேங்­காய் கடை, இனிப்பு மிட்­டாய் கடை, பாதாம் பால் கடை, பெட்­டிக்­கடை, மின்சாரக் கடை, மளிகைக் கடை­களும் எரி­யத் தொடங்­கின. பூட்­டப்­பட்டிருந்த கடை­களில் இருந்து வெளி­யான புகை அந்தப் பகு­தி­யையே புகை மண்­ட­ல­மாக மாற்­றி­யது.

20க்கும் மேலான தீய­ணைப்பு வீரர்­கள் தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு­பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வரு­கிறது.

மற்றொரு தீவிபத்து:

தங்க நகை, பணம் நாசம்

சேலம் மாவட்­டம், வாழப்­பாடி அருகே மின் கசி­வால் ஏற்­பட்ட தீ விபத்­தில் தனி­யார் பால்­பண்ணை ஊழி­ய­ர் ரமேஷ், 45, என்பவரது வீட்­டில் வீடு கட்­டு­வ­தற்­காக பல ஆண்­டாக சேமித்து வைத்­தி­ருந்த 25 சவ­ரன் தங்க நகை­கள், ரூ 1 லட்­சம் ரொக்­கப் பணம், வீட்டு உப­யோகப் பொருள்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. இது­குறித்து வாழப்­பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு­கின்­ற­னர். வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றி ருந்ததால் உயிர் தப்பினர்.

திருச்சியில் 100 ஆண்­டு­கள் பழ­மை­யான காந்தி சந்தை அமைந்­துள்­ளது. இந்தச் சந்தையின் நுழைவாயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கடைகள் எரிந்து சாம்பலாயின. உயிரிழப்பு குறித்து தகவலில்லை.

படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!