ஆற்றின் நடுவே ரூ.2 லட்சம் செலவில் பாலம் அமைத்த மக்கள்

ஆற்றின் நடுவே ரூ.2 லட்சம் செலவில் பாலம் அமைத்த மக்கள்

1 mins read
2af59d09-fb6d-4873-a7d1-2791f8bfca37
ரூ.2 லட்சம் சொந்த செலவில் பாலம் அமைத்த மக்கள். படம்: ஊடகம் -

தம்­மம்­பட்டி: கெங்­க­வல்­லி­யில் பாலம் கட்­டித் தரும்­படி மக்­கள் பல­முறை கோரிக்கை விடுத்­தும் இதுவரையும் எந்த ஒரு நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டா­த­தால் மக்கள் அனைவரும் சொந்தமாக நிதி திரட்டி ரூ.2 லட்­சம் செலவில் தற்கா­லி­கப் பாலத்தை அமைத்­துள்­ள­னர்.

கெங்­க­வல்லி அருகே சுவேத நதிக்­க­ரை­யோ­ரம் சுமார் 200 குடும்­பத்தி­னர் வசிக்­கின்­ற­னர். இவர்கள் இந்த சுவேத நதி­யைக் கடந்­து­தான் கெங்­க­வல்லி பகுதிக்குச் செல்லவேண்­டும். ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படும் போதெல்­லாம் மக்­கள் 5 கி.மீ. தூரம் சுற்­றித்­தான் செல்­ல­வேண்­டும்.

இந்­நி­லை­யில், இப்­ப­கு­தி­யைச் சேர்ந்த 200 குடும்­பங்­கள் தலா ரூ.1,000 வீதம் பணம் சேகரித்து ரூ.2 லட்­சம் செல­வில் சிமெண்ட் குழாய்­களை வாங்கி, அவற்றை ஆற்­றின் குறுக்கே பதித்து, அதன் மேல் மண்­கொட்டி தற்­கா­லிகப் பாலத்தை அமைத்­துள்­ள­னர்.

இனியாவது, அரசு எங்­களது கோரிக்­கைகளை ஏற்று இங்கு நிரந்தர பாலத்தை கட்­டித்­த­ர­வேண்­டும் என்­று கோரியுள்ளனர்.