முழுஊரடங்கு தேவையில்லை

சென்னை: ஓமிக்­ரான் தொற்று வகை­யைக் கண்­ட­றி­வ­தற்­கான மர­பணு சோத­னைக்கு மாதிரி அனுப்­பு­வதை தமி­ழக அரசு நிறுத்­தி­விட்­ட­தாக நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

ஓமிக்­ரான் தொற்று நாடு முழு­வ­தும் பர­வத் தொடங்­கி­யது முதல், மர­பணு சோத­னைக்­காக பெங்­க­ளூரு, புனே ஆய்­வ­கங்­க­ளுக்கு மாநில மருத்­து­வத்­து­றை­யி­னர் மாதி­ரி­களை அனுப்பி, முடி­வு­க­ளைப் பெற்று வந்­த­னர்.

இந்­நி­லை­யில் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"தமி­ழ­கத்­தில் கொரோனா மூன்­றா­வது அலை­யைப் பொறுத்­த­வரை தீவிர சிகிச்­சை­யில் அனு­ம­திக்­கப்­

ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது.

"உதா­ர­ண­மாக, ராஜீவ்­காந்தி மருத்­து­வ­மனை மற்­றும் கிங்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் தலா 250 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"இவர்­கள் யாருக்கும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­படும் நிலை ஏற்­ப­ட­வில்லை. மேலும் அவர்­க­ளுக்கு உயிர்­வாயு தேவை (ஆக்­சி­ஜன்) ஏற்­ப­ட­வில்லை. அனை ­வ­ரும் நல­மு­டன் உள்­ள­னர்.

"மர­பணு சோதனைக்கு மாதிரி கள் அனுப்பப்பட்டு வந்த நிலை­யில் தமிழகத்தில் 85 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஓமிக்­ரா­ன் தொற்றும் 16 விழுக்­காட்­டி­ன­ருக்கு டெல்டா தொற்­றும் உறு­தி­யாகி வரு­கின்­றன.

"ஓமிக்­ரான் மர­பணு பரி­சோ­தனை முடிவு வரு­வ­தற்­குள் பாதிக்­கப்­பட்­ட­வர் குண­ம­டைந்து விடு­கின்­றார். இத­னால், மர­பணு சோத­னைக்கு மாதி­ரி­கள் அனுப்­பப்­ப­டு­வதை நிறுத்­தி­விட்­டோம்.

"டெல்­டா­வும் ஓமிக்­ரா­னும் இணைந்து இந்­தி­யா­வில் வேக­மாக பரவி வரு­கின்­றன. பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு மித­மான அறி­கு­றியே இருப்­ப­தால் வீடு­க­ளி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர்.

"மேலும், அரசு ஊழி­யர்­க­ளுக்கு பொங்­கல் விடு­முறை வரு­வ­தால், மெகா தடுப்­பூசி முகாமை இந்த வாரத்­திற்கு பதில் அடுத்­த­வா­ரம் நடத்த ஆலோ­சனை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

"இப்­போ­தைக்கு முழு­ஊ­ர­டங்கு தேவை­யில்லை. கட்­டுப்­பா­டு­க­ளுடன் கூடிய ஊர­டங்கு போதும். ஊர­டங்­கால் மக்­க­ளின் பொரு­ளா­தா­ரம் ­பா­திக்­கப்­படக்கூடாது என முதல்­வர் வலி­யு­றுத்தி உள்­ளார். பொங்­கல் பண்­டி­கைக்­குப் பிறகு ஒவ் வொரு வாரமும் முழுஊர­டங்கை நீட்­டிக்க வாய்ப்­பில்லை," என்­றார் அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன்.

மா.சுப்பிரமணியன்: விரைவாக குணமடைவதால் ஓமிக்ரான் மரபணு பரிசோதனை நிறுத்தம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!