ஆப்பிரிக்க பெண்ணை மணந்த தமிழக இளையர்

கோவை: ஆப்­பி­ரிக்க பெண்­ணைக் காத­லித்து மணந்­துள்­ளார் கோவையைச் சேர்ந்த இளை­யர் முத்து மாரி­யப்­பன். இவர்­க­ளது திரு­மண நிகழ்­வில் பங்­கேற்ற மண­மகளின் உற­வி­னர்­கள் தமிழகப் பாரம்­பரிய முறைப்­படி வேட்டி, சேலை அணிந்­தி­ருந்­த­னர்.

பொறி­யி­யல் படிப்பை முடித்­துள்ள முத்­து­மா­ரி­யப்­பன் கேம­ரூன் பகு­தி­யில் பணி­யாற்றி வந்­தார். அப்­போது அவ­ருக்­கும் அந்­நாட்­டைச் சேர்ந்த வால்மி இனாங்கோ என்ற பெண்­ணுக்­கும் இடையே காதல் மலர்ந்­தது.

முத்து மாரி­யப்­பன் இந்து எனில், வால்மி கிறிஸ்­த­வர். எனி­னும் காத­லர்­கள் இரு­வ­ரும் தத்­தம் பெற்­றோரி­டம் விவ­ரம் தெரி­வித்து, அவர்­களின் சம்­ம­தத்­து­டன் திரு­ம­ணம் செய்­து­கொள்ள முடி­வெ­டுத்­த­னர். திரு­ம­ணத்தை கோவை­யில் நடத்து­வது என முடி­வா­னது.

அதன்­படி பெண்­ணின் பெற்றோ­ரும் உற­வி­னர்­களும் கோவை வந்து சேர்ந்­த­னர். நேற்று முன்­தி­னம் நாதஸ்­வர இசை­யோடு நடை­பெற்ற திரு­மண நிகழ்­வுக்கு மண­ம­கள் பல்­லக்­கில் வைத்து திரு­மண மண்­ட­பத்­துக்கு அழைத்து வரப்­பட்­டார். பிறகு இந்து முறைப்­படி தாலி கட்டி காத­லியை மணந்­தார் மண­ம­கன் முத்து மாரி­யப்­பன். இந்­நிகழ­வில் மண­ம­கள் வால்மியின் பெற்­றோ­ரும் உற­வி­னர்­களும் வேட்டி, சேலை அணிந்­தி­ருந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!