பாஜக நிர்வாகி கொலை; கும்பல் மீது வழக்கு

சென்னை: ெசன்னை சிந்­தா­தி­ரி­பேட்­டை­யைச் சேர்ந்த பால­சந்­தரை, 30, நேற்று முன்­தி­னம் இரவு ஒரு கும்­பல் கொன்­று­விட்டு தப்பி ஓடி­விட்­டது. இந்­தக் கும்­ப­லைத் தேடும் பணி­யில் ஏழு தனிப்­படை காவ லர்­கள் ஈடு­பட்டு உள்­ள­னர்.

பால­சந்­தர், பாஜ­க­வின் மத்­திய சென்னை மாவட்ட பட்­டி­யல் இன அணி­யின் தலை­வ­ரா­கப் பொறுப்பு வகித்­த­வர். அவ­ரது பாது­காப்­புக்­குச் சென்ற காவ­லர், கவ­னக்­குறை­வாக இருந்ததால் பணி­யிடை நீக் கம் செய்­யப்­பட்டு உள்­ளார்.

சிந்­தா­தி­ரிப்­பேட்டையைச் சேர்ந்த ரவுடி பிர­தீப், அவ­ரது சகோ­த­ரர் சஞ்­சய், அவர்­க­ளது நண்­பன் கலைவாணன் அகியோர் மீது சிந்­தா­தி­ரிப்­பேட்டை காவல்­து­றை­யி­னர் கொலை வழக்­குப் பதிந்துள்ளனர்.

விசா­ர­ணை­யில், பால­சந்­த­ரின் உற­வி­னர் ஒரு­வர், அதே பகு­தி­யில் துணிக்­கடை நடத்தி வரு­கி­றார். அந்த துணிக்­கடை உரிமையாளரை ரவுடி பிர­தீப்­பின் மனை­வி­யும் உற­வி­னர்­களும் மிரட்டி மாதா­மா­தம் துணி எடுத்­துச் சென்­றுள்­ள­னர்.

இது­போல் அடிக்­கடி புதுத் துணி­களை எடுத்­துக்ெ­காண்டு பணம் கொடுக்­கா­மல் இருந்­துள்­ள­தாக குற்­றச்­சாட்­டு உள்­ளது.

இது­கு­றித்து கடை­ உரி­மை­யா­ளர் பால­சந்­த­ரி­டம் கூறி­யுள்­ளார்.

இது­தொ­டர்­பாக பால­சந்­த­ருக்­கும் பிர­தீப்­புக்­கும் முன்­வி­ரோ­தம் இருந்­துள்­ள­தா­கச்­ சொல்­லப்­படு கிறது. பால­சந்­த­ரின் உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் இருந்­த­தால் போலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

நேற்று முன்தினம் இரவு சிந்­தா­தி­ரிப் பேட்டை சாமி­நா­யக்­கர் ெதரு­வில் நண்­பர்­க­ளு­டன் பால­சந்­தர் பேசிக்­கொண்­டி­ருந்­தார்.

அப்­போது, பாலசந்தருக்கு பாது காப்பு வழங்கும் காவ­லர் பால­கிருஷ்­ணன் தேநீர் அருந்தச் சென்­றி­ருந்­தார். அந்த சம­யத்­தில் இரு சக்­கர வாக­னத்­தில் வந்த ஒரு கும்­பல் பால­சந்­தரை வெட்­டி­விட்டு தப்­பி­ய நிலையில், பால­சந்­தர் உயி­ரி­ழந்­தார்.

பிர­த­மர் மோடி இன்று சென்னை வரும் நிலை­யில், பாஜக நிர்­வாகி படு­கொலை செய்­யப்­பட்­டுள்ள சம்­பவம் அதிர்ச்­சிைய ஏற்­ப­டு­த்தி உள்­ளது.

கொலைக்கு கார­ண­மா­ன­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்­டும் என பாஜக மாநில துணைத் தலை­வர் கரு. நாக­ராஜன் வலி­யு­றுத்தி உள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!