சென்னையில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி அறிவிப்பு பரவும் சளிக்காய்ச்சல்: ஒரே மாதத்தில் எட்டுப் பேர் பலி ‘முகக்கவசம் அணிவது கட்டாயம்’

சென்னை: சென்னையில் கடந்த இரு நாள்களாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் கடந்த இரு நாள்களாக கிருமிப் பரவல் சற்று அதிகரித்து வருகிறது. அத்துடன், பண்டிகைக் கால விடுமுறை தினங்களும் நெருங்கி வரும் நிலையில், கொவிட் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை: தமி­ழ­கத்­தில் 'இன்­ஃப்­ளு­யன்ஸா' என்ற சளிக்­காய்ச்­சல் வேக­மா­கப் பரவி வரு­வ­தால், பெற்­றோர் தங்­கள் குழந்­தை­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிப்­ப­தில் அதிக அக்­கறை காட்­ட­வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

மாநிலத்தில் கோடைக்­கா­லம் முடிந்து பரு­வ­ம­ழைக் காலம் தொடங்­கும் நிலை­யில், சாதா­ரண காய்ச்­ச­லும் சளிக்காய்ச்­ச­லும் பரவி வரு­கின்­றன.

சென்னை, செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் இந்தக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

பெரி­ய­வர்­க­ளை­விட குழந்­தை­களே இக்காய்ச்­சலால் அதிகள வில் பாதிக்கப்பட்டு வரும் நிலை யில், தமி­ழ­கத்­தில் இக்காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்­தில் எட்­டுப் பேர் உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் முதல் இது­வரை 819 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இப்­போது இக்காய்ச்சலுக்கு 282 பேர் சிகிச்சைபெற்று வரு­கின்­ற­னர்.

இந்நிலையில், "கொவிட்-19 அலை­க­ளின் தாக்­கத்­துக்­குப் பின்­னர், பள்­ளிக்­குச் செல்ல ஆரம்­பித்­துள்ள மழ­லை­யர் இந்த சளிக்­காய்ச்­ச­லால் அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்,'' என சென்னை அப்­போலோ மருத்­து­வ­மனை­யின் குழந்­தை­கள் நல மருத்­து­வர் ஜெய­கு­மார் ரெட்டி தெரி­வித்­துள்­ளார்.

"திடீர் வெயில், திடீர் மழை என பரு­வ­நிலை மாறி­மாறி வரு­வ­தால் காய்ச்­ச­ல் பாதிப்பு கூடியுள்ளது.

"கொவிட்-19 பெருந்­தொற்று பர­விய இரண்­டாண்டு காலத்­தில் மழ­லை­ய­ரும் மாண­வர்­களும் வீட்­டுக்­குள் இருந்­த­தால் எல்­லா­வ­கை­யான காய்ச்­ச­லில் இருந்­தும் பாது­காப்­பாக இருந்­த­னர்.

"தற்­போது கூட்­ட­மாக பள்ளி செல்ல ஆரம்­பித்­துள்­ள­னர். திடீர் பருவநிலை மாற்­றத்­தால் கிரு­மித் தாக்­கம், காற்­றின் மூலம் ஒரு­வ­ரி­டம் இருந்து மற்­றொ­ரு­வ­ருக்கு வேக­மா­கப் பர­வு­கிறது. குறிப்­பாக மழ­லை­யர் பள்ளி மாண­வர்­கள் அதி ­க­ள­வில் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

"எனவே, தேர்வை தள்­ளி­வைப்­பது நல்­லது. தேர்­வுக்கு முன்பே விடு­முறை அளிக்­க­லாம். வெளி­யில் செல்­வ­தைத் தவிர்த்­தாலே கிரு­மித் தாக்­கம் குறைந்துவிடும்," என மருத்துவர் ஜெய­கு­மார் ரெட்டி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!