சென்னை: சென்னையின் மேற்கு மாம்பல வட்டாரத்தில் இருக்கும் கோதண்ட ராமர் இந்து ஆலயத்தின் குளம் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமையன்று (6 மே) குளத்தைத் திறந்து வைத்தார்.
1.65 பில்லியன் ரூபாய் (26.77 மில்லியன் வெள்ளி) செலவில் குளம் சீரமைக்கப்பட்டதாக திரு உதயநிதி தெரிவித்தார்.
1.9 மில்லியன் ரூபாய் (30,828 வெள்ளி) செலவில் இங்கு கழிவறை கட்டப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.