தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு

மதுரை: தேசப்பிதா என்று நாட்டு மக்களால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மத நல்லிணக்க நாளாகவும் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதுடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மத நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகள் என்ற பெயரில் பரபரப்புச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் ‘மதவெறிக்கு மகாத்மா பலியான ஜனவரி 30’ என்று ரத்தத்துளிகள் சிதறும் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம், மத நல்லிணக்கம் பேணுவோம், தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சுவரொட்டிகள் மதுரையில் அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. காந்தியின் சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பாக அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

அதில் மதவெறிக் கும்பலின் வன்மம் காந்தியார்மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், காந்தியின் நினைவு தினத்தையொட்டி திமுக கூட்டணிக் கட்சிகள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!