பிலிப்பீன்ஸ்

ஹோனலூலு: தென்சீனக் கடலில் பிலிப்பீன்சுக்குச் சொந்தமான கப்பல்களைச் சேதப்படுத்தியதும் அதிலிருந்த சிப்பந்திகளுக்குக் காயம் ஏற்படுத்தியதும் பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் அனைத்துலகச் சட்டத்தை மீறிய செயல் என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
மணிலா: சுட்டெரிக்கும் வெப்பத்தில் நாடே புழுங்கிவரும் வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டின் சில நகரங்களில் மே 2, 3 ஆகிய தேதிகளில் பொதுப் பள்ளிகள் தொடர்ந்து நேரடி வகுப்புகளை நிறுத்திவைத்திருக்கும்.
மணிலா: கடும் வெப்பம் மற்றும் ஜீப்னி ஓட்டுநர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக பிலிப்பீன்ஸ் அனைத்து பொதுப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று அந்நாட்டுக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
குவெஸோன் சிட்டி (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
மணிலா: முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐசிசி) தாம் ஒப்படைக்கப்போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறியுள்ளார்.