You are here

தலைப்புச் செய்தி

இன்னும் ஈராண்டுகளில் அமைதியான, சொகுசு நிறைந்த பயணங்கள்

இன்னும் ஈராண்டுகளில் 60 மின்சாரப் பேருந்துகள் சிங்கப்பூர் சாலைகளில் செல்வதைக் காண லாம். அந்தப் பேருந்துகள் மூலம் சத்தமில்லாத சொகுசு நிறைந்த பயணத்தை அவற்றில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. இப்பேருந்துகள் 50 மில்லியன் வெள்ளி செலவில் உருவாகும் என்றும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

எட்டு கார்கள் விபத்து; பெண்கள் இருவர் காயம்

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் நேற்று இரண்டு விபத்துகள் நிகழ்ந்தன. மொத்தம் எட்டு கார்கள் விபத்துக்குள்ளாகின. இதனால் தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நேற்று காலை உச்ச நேரத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 8.30 மணி அளவில் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் மூன்று கார்கள் விபத்துக் குள்ளானது தொடர்பாக தகவல் கிடைத்ததாக போலிசார் தெரி வித்தனர்.

துடிப்புடனும் நடைமுறைக்கு ஏற்றவாறும் செயல்படுக - அமைச்சர் ஜோசஃபின் டியோ

வர்த்தகங்களுக்கு உதவ மூத்த ஊழியரணியைப் பயன்படுத்துதல், மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பட ஊழியர்களுக்கு உதவுதல், படிப் படியாக மேம்பட வாய்ப்பளிக்கும் வேலையிடங்கள் ஆகியவை வருங்கால சிங்கப்பூரில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற் படுத்தும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். மனிதவள அமைச்சின் 20ஆம் ஆண்டு விழா நேற்று மரினா பே அருகே நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் டியோ, அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றினார்.

சமூகப் பங்களிப்பு: இளம் சிங்கப்பூரர்கள் அறுவருக்கு உயரிய விருது

வாழ்வின் வளரும் பருவத்தில் கெட்ட சகவாசத்துடன் வளர்ந்த தால் டேனியல் டே என்பவர் கோபக்கார இளைஞனாக வளர்ந் தார். இதனால், போதைப் பொருள், கும்பல் சண்டை என சட்டவிரோத காரியங்களில் அடிக்கடி ஈடுபட் டார். அதைத் தொடர்ந்து ஐந்து முறை சிறுவர் சீர்திருத்த நிலை யத்திற்கு அனுப்பப்பட்டார். இதில் கடைசியாக அங்கு சென்றதற்குக் காரணம், தன்னை அங்கு அனுப் பியதற்கு பழிவாங்கும் முயற்சியாக அந்த நிலையத்தை சிவப்பு சாயம் கொண்டு சேதப்படுத்தும் முயற்சி யில் ஈடுபட்டதால்.

தொழில்நுட்பத்துடன் கலைகள் இணைவது குறித்து அமைச்சர் ஹெங் சுவீ கியட்

சிங்கப்பூரின் வளர்ச்சிக்குக் கடந்த 53 ஆண்டுகளாகப் பொறி யியல், தொழில்நுட்பம், கணிதம் போன்ற துறைகள் முக்கிய பங்கு அளித்து வந்துள்ளபோதிலும் கலைகள் மற்றும் மனிதவியலின் முக்கியத்துவமும் அதிகரித்து வருவதாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார். “தொழில்நுட்பத்துடன் கலை கள் இணையும்போது சிறந்த யோசனைகள் மலரும். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது நல்ல தரமான யோசனைகள் கிடைக்கும்,” என்றார் திரு ஹெங்.

துவாஸ் சோதனைச்சாவடியில் சிகரெட் கடத்தலை முறியடிக்க உதவும் ‘ஊடுகதிர்’

சிகரெட் கடத்தலைத் தடுக்க துவாஸ் சோதனைச்சாவடியில் ‘எஸ்க்ரே ஸ்கேனர்’கள் எனப்படும் ஊடுகதிர் வருடிச் சாதனங்கள் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று பொருத்தப்பட்டன. அதற்கான பலன் இரண்டு வாரங்களில் தெரிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மலேசியாவில் பதிவு செய்யப் பட்ட பேருந்தில் மறைத்துவைக்கப் பட்டிருந்த வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகள் சிக்கின. அவை ஊடுகதிர் வருடிச் சாதனத்தின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்டன.

விமானக்காட்சி மூலம் $343 மி. தொகை செலவிடப்பட்டது

சிங்கப்பூர் விமானக்காட்சி 2018 மூலம் $343 மில்லியனுக் கும் அதிக தொகை செலவிடப் பட்டு இருக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிங்கப்பூர் விமானக்காட்சி இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஆறு நாட்களுக்கு நடந்தது. அதில் கலந்துகொண்ட வருகையாளர்கள், சுற்றுப் பயணிகள், காட்சியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் முதலா னோர் அந்த அளவுக்குச் செல விட்டுள்ளனர்.

எண்ணெய்சாரா ஏற்றுமதி 8.3% வளர்ச்சி; மின்னணு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஆண்டுக் காண்டு அடிப்படையில் சென்ற மாதம் 8.3 விழுக்காடு அதிகரித் தது. மாதாந்திர அடிப்படையிலும் சென்ற மாதம் அதிக ஏற்றுமதி இருந்தது. ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் அது ஐந்து விழுக்காடு அதிகம். ஆண்டுடனும் மாதத்துடனும் ஒப்பிடும்போது ஏற்றுமதி விகிதம் அதிகரித்தபோதிலும் ஆய்வாளர் களின் முன்னுரைப்பைவிட அது குறைவுதான். செப்டம்பர் மாதத்தில் 11.1 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று புளூம்பெர்க்கின் முன்னு ரைப்பு ஆய்வு தெரிவித்திருந்தது.

எஸ்பிஎச் சந்தாதாரர்களுக்கு பிரியாணி விருந்து

சிங்கப்பூர் மக்களுக்கு செய்தியை வழங்குவதோடு நாவூற வைக்கும் உணவையும் வழங்குகிறது சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்). தம் உணவு வெகுமதித் திட்டத்தின் (Food Rewards Programme) மூலம் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை உணவு வண்டி ஒன்று மூன்று இடங்களில் நிறுத்தப்பட்டி ருக்கும். இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இன்று ‘பெஸ்ட் ஃபுட் கேட்டரர்’ என்ற உணவு விநியோகிப்பாளரு டன் இணைந்து கேஷ்வரினா கறி உணவகம் தயாரிக்கும் பிரியாணிப் பொட்டலங்கள் வாசகர்களுக்கு வழங்கப்படும். சம்பால் கோழி, சம்பால் முட்டை, கத்திரிக்காய் பச்சடி போன்றவை பிரியாணிப் பொட்டலங்களில் இருக்கும்.

உருமாறும் சிலேத்தார் பங்களாக்கள்

சிலேத்தார் ஆகாயத் தொழில் துறை பூங்காவில் பழமை பாது காப்புக்குட்பட்ட பதின்மூன்றுக்கு மேற்பட்ட காலனித்துவ பங்களாக் கள் புத்துயிர் பெறும் வகையில் உருமாறவிருக்கின்றன. சில்லறைக் கடைகள், உணவு மற்றும் பானம் விற்கும் பலதரப் பட்ட கடைகள் அங்கு திறக்க ப்பட வுள்ளன. அதற்கான உருமாற்ற சீரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pages