தைவான்

தைப்பே: தைவானின் ஹுவாலின், தைடூங் ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா வரும் சுற்றுப்பயணங்களுக்குத் தங்குமிடம், போக்குவரத்து ஆகியவற்றில் சலுகைகள் வழங்க தைவான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தைப்பே: இவ்வாண்டு நடைபெறவுள்ள உலக சுகாதார நிறுவன வருடாந்தரக் கூட்டங்களில் தைவான் பங்கேற்பது சிரமமாக இருக்கும் என்றும் இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை தைவான் நாடுவதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வியாழக்கிழமை (மே 2ஆம் தேதி) அன்று தெரிவித்தார். முன்னதாக இதன் தொடர்பில் தைவானை இந்தக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள மலேசிய சைவ உணவகம் ஒன்றில் உணவருந்தியதைத் தொடர்ந்து, நச்சுணவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) உயிரிழந்தார்.
தைப்பே: தைவானின் கிழக்கு மாவட்டமான ஹுவாலியன் பகுதியில் ஏப்ரல் 27ஆம் தேதி சனிக்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கங்களால் உண்டான சேதங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தைப்பே: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கை விட்டுக் கிளம்பியதும் தைவான், சீனாவைப் பிரிக்கும் தைவான் நீரிணையின் நடுப்பகுதியைத் தாண்டி சீனா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கெண்டதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது.