முதல் காலாண்டில் 1.2 விழுக்காட்டுக்குக் குறைந்த பொருளியல் வளர்ச்சி

இவ்வாண்டின் முதல் காலாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி விகிதம் 1.2 விழுக்காடு என வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட கருத்தாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பத்தாண்டுகளில் ஆக மெதுவடைந்த வளர்ச்சி விகிதமாகும். அத்துடன், சிங்கப்பூரின் 2019ஆம் ஆண்டு பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 1.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடையே இருக்கும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு முன்னர் அந்த முன்னுரைப்பு  1.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக்காட்டுக்கும் இடையே இருந்தது.

அமைச்சு முன்னுரைத்த 1.3 விழுக்காட்டு வளர்ச்சி விகிதத்தையும் புளூம்பர்க் செய்தி நிறுவனம் முன்னுரைத்த 1.4 விழுக்காட்டு வளர்ச்சி விகிதத்தையும் விட முதல் காலாண்டின் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. 

2009ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்குப் பிறகு ஆகக் குறைவான வருடாந்திர பொருளியல் வளர்ச்சி விகிதமாகவும் இது உள்ளது.

கடந்த கருத்தாய்வின் முடிவுகளுடன் ஒப்புநோக்க, இந்தக் கருத்தாய்வின் முடிவுகளின்படி 2019ஆம் ஆண்டில் உலகின் பொருளியல் வளர்ச்சி இன்னும் மெதுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளியல் நிச்சயமின்மையும் வர்த்தக இழப்புகளுக்கான அபாயங்களும் நிலவுவதாக வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட சிங்கப்பூர் பொருளியல் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. 

செவ்வாய்க்கிழமை காலை இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றநிலை, எதிர்பார்ப்புகளைவிடக் குறைவாக இருக்கும் சீனாவின் பொருளியல் வளர்ச்சி விகிதம், பிரெக்சிட்டின் தாமதம் ஆகியவை உலகளாவிய வர்த்தக அபாயங்களென கருத்தாய்வு குறிப்பிடுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இல்லவாசிகள் பயிற்சிக்குப் பயன்படுத்தும் பந்தை வீசிப் பார்க்கும் துணைப் பிரதமர் ஹெங்.(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

16 Sep 2019

நாட்டு வளர்ச்சியில் அனைவருக்கும் பங்குண்டு