தேவாலயத்தில் நோன்பு துறப்பு

புக்கிட் தீமா சாலையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று மாலை 7.09 மணிக்கு எகிப்தைச் சேர்ந்த ஷேக் முஸ்தஃபா ஷர்காவி யின் குரலில் பாங்கு (அஸான்) எனப்படும் இஸ்லாமிய தொழுகைக்கான அழைப்பு ஒலித்தது. அந்தத் தருணத்தில் பல சமயங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் நோன்பு துறந்தனர்.  சமய நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாக ‘தி சர்ச் ஆஃப் ஜீசஸ் கிறைஸ்ட் ஆஃப் லேட்டர் டே செயின்ட்ஸ்’ தேவாலயத்தில் இஸ்லாமிய நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், சமூக, சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

தேசிய தொழிற்சங்கக் காங் கிரசின் உதவி தலைமைச் செயலாளரும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மெல்வின் யோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சி எல்லா நிலைகளிலும் தனித் துவமும் குறிப்பிடத்தக்க வகை யிலும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். விழாவின் தொடக்கத்தில் கிறிஸ்துவ பிரார்த்தனை நடந்தது. இரு சமயங்களையும் சேர்ந்த இளையர் பாடகர் குழுவினர் மெல்லிசையில் வருகையாளர்களை மகிழ்வித்தனர். தேவாலயத்தையும் ஜாமியாவையும் சேர்ந்த தொண்டூ ழியர்களும் நிர்வாகிகளும் வருகை யாளர்களை உபசரித்தனர். 

“உலகிற்கே சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தை எடுத்துக்காட் டும் நிகழ்வாக தேவாலயத்தில் நடந்த இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சி விளங்குவதாகக் கூறினார் ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஹெச் எம் சலீம். “இதுவரையில் நான் இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொண்டதில்லை. சமய நல்லிணக்கத்திற்கு இதுவே அத்தாட்சி,” என்று பெருமிதம் கொண்டார் சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழில் சபையின் தலைவர் டாக்டர் டி சந்துரு. 

“சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம் நமது தேசிய பொக்கிஷம். அதைக் கொண்டாடி மகிழும் வண்ணம் இந்த நிகழ்வு அமைந்துள்ளது,” என்றார் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு தேவேந்திரன்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!