சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து புதன்கிழமை ஹாங்காங்கில் புதிய ஆர்ப்பாட்டம்

சீனாவின் உத்தேச நாடு கடத்தும் சட்டத்தை எதிர்த்து நேற்று ஹாங்காங்கில் வரலாறு காணாத அளவில் மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதனையடுத்து புதிய ஆர்ப்பாட்டம் வரும் புதன்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஹாங்காங் ஆர்ப்பாட்ட குழுக்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் முன்னணி எனும் அமைப்பு புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு பேரணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திய கூட்டணியின் தலைவர் ஜிம்மி ஷாம் கூறியுள்ளார்.

சந்தேக நபர்களை ஹாங்காங்கிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்த இந்தச் சர்ச்சைக்குரிய சட்டம் வழிவகுக்கும்.

ஹாங்காங் அரசியல் எதிர்ப்பாளர்களை இலக்காகக் கொண்டு சீனா இந்தச் சட்டத்தை செயல்படுத்த இருப்பதாக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சட்டம் குறித்து ஹாங்காங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதிக்கவிருப்பதாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

சட்டத்தைத் தள்ளுபடி செய்தோ தாமதப்படுத்தவோ கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு மாறாக தலைவர் கேரி லாம் கூறியதையடுத்து புதிய பேரணி உருவாகவிருக்கிறது.

சர்ச்சைக்குரிய சட்டம் தேவை என்று கேரி லாம் கூறிவருகிறார். மனித உரிமை பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் ஒரு மில்லியன் பேர் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆக அதிகமாக 240,000 பேர் கலந்துகொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்பாட்டாளர்களின் எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டால், பிரிட்டிஷ் அரசு 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைத்தபிறகு அங்கு நடந்த ஆகப் பெரிய ஆர்ப்பாட்டமாக அது வரலாற்றில் இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!