ஹாங்காங்: கலவரத்தை ஒடுக்க கண்ணீர்ப் புகை

கண்ணீர்ப் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தபட்சம் ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஹாங்காங் அதிகாரி கள் நேற்று தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய உத்தேச ‘நாடு கடத்தும்’ சட்டத்துக்கு எதிராகப் போராடுவோர் கலவரத்தை அறிவித்ததை அடுத்து, அவர்கள் மீது போலிசார் முதலில் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு சுட்டனர். அந்தச் சட்டத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப் பட்டதையடுத்து, அரசாங்கத் தலைமை யகத்துக்கு வெளியில் கூடி முக்கிய சாலைகளை மறைத்த போராட்டக்காரர் கள் மீது மிளகு தெளிப்பான், கண்ணீர்ப் புகை ஆகியவற்றை போலிசார் வீசினர்.

தண்ணீர்ப் புட்டிகள், போக்குவரத்து கூம்புகள் போன்றவற்றை வீசிய போராட் டக்காரர்கள் அந்தச் சட்டத்தை மீட்டுக் கொள்ளும்வரை போராடப்போவதாக கோஷம் எழுப்பினர்.

“வேறு வழியின்றி ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று,” என்று போலிஸ் ஆணையர் ஸ்டீபன் லோ வாய் சுங் கூறினார்.

அந்தச் சட்டம் நேற்று நாடாளு மன்றத்தில் வாசிக்கப்பட இருந்தது. அதனைத் தள்ளிவைத்ததை எதிர்க் கட்சிகள் கொண்டாடியதாக புளூம்பெர்க் செய்தி தெரிவித்தது.

“நீங்கள் அதிசயம் புரிந்துள்ளீர்கள். உங்களது போராட்டத்தால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்று லேபர் கட்சியைச் சேர்ந்த ஃபெர்னேன்டோ சியுங் கூட்டத்தினரைப் பார்த்து ஆர்ப்பரித்தார். ஆனால், ஹாங்காங் அரசாங்கத்துக்கு சீனாவின் ஆதரவு தொடரும் என்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹெங் ‌ஷுவாங் செய்தியாளர்களிடம் கூறினார். சீனாவிலிருந்து கூடுதல் துருப்புகளை ஹாங்காங்குக்கு அனுப்ப இருப்பதாகக் கூறப்படுவது போலிச் செய்தி என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு அந்தச் சட்டத்தில் 3 மாற்றங்களைச் செய்திருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!