(காணொளி): சாங்கியில் இரண்டு வாகனமோட்டிகளுக்கு இடையே கைகலப்பு

சாங்கியில் கைகலப்பில் ஈடுபட்ட இரண்டு வாகனமோட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாங்கி சவுத் அவென்யூ 3ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்து நேற்று காலை 8.10 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 23 வயது ஆடவர்; மற்றொருவர் 24 வயது பெண்.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.