பிரதமரைப் பந்தாடிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பெரும்பான்மையை இழந்துவிட்ட அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் , பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என அறிவித்திருக்கிறார்.

ஒப்பந்தம் இல்லாமலேயே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்ற திரு ஜான்சனின் நிலைப்பாட்டை எதிர்த்த கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் கிளர்ச்சி எம்பிக்களும் செய்திருந்த சட்ட முன்மொழி ஒன்றுக்கான வாக்களிப்பில் அரசாங்கம் 328 – 301 என்ற எண்ணிக்கையில் தோற்றது.

Remote video URL

வெற்றி பெற்ற தரப்பினர், பிரிட்டனின் வெளியேற்றத்தைத் தாமதப்படுத்தக்கூடிய சட்ட மசோதாவை முன்னெடுக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற அந்நாட்டின் குடிமக்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பொது வாக்கெடுப்பின்மூலம் முடிவு செய்திருந்தபோதும் இந்த விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக இருந்தால் தேர்தல் நடத்தப்படும் என திரு ஜான்சன் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.

“எந்தச் சூழ்நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தாமதப்படுத்துமாறு பிரஸ்சல்ஸிடம் நான் கேட்டுக்கொள்ளப் போவதில்லை என்பதை அனைவரிடமும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஒப்பந்தமற்ற வெளியேற்றம் பெரும் பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தும் என அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், வெளியேற்றத்தை ஆதரிப்பவர்கள், பிரிட்டன் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என விரும்புகின்றனர்.

“நாம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுகிறோம், எந்தக் கேள்விக்கும் இடமில்லை,” என்று தமது அலுவலகத்திற்கு வெளியில் அவசரமாக வெளியிட்ட அறிக்கையில் திரு ஜான்சன் கூறினார்.“நமது வாக்குறுதிகளை மீறும் எந்த முயற்சியையும் நாங்கள் ஏற்கமாட்டோம். எனக்குத் தேர்தல் வேண்டாம். உங்களுக்கும் தேர்தல் வேண்டாம். மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முற்படுவோம்,” என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!