ஜப்பான்: தேடி மீட்கும் பணியில் 110,000 பேர்

ஜப்பானை நிலைகுலையச் செய்த ‘ஹகிபிஸ்’ புயலால் மாண்டோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 16 பேரைக் காணவில்லை என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 11,000க்கும் மேற்பட்டோர் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றும் மழை பெய்ததால்  அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி 75,900 வீடுகள் மின்சாரமின்றியும் 120,000 வீடுகள் தண்ணீர் விநியோகமின்றியும் தவித்து வருவதாகக் கூறப்பட்டது. எப்போது வீடு திரும்புவோம் என உறுதியாகத் தெரியாமல் ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். (படத்தில்) வெள்ளம் சூழ்ந்துள்ள மியாகி மாநிலம், கக்குடா பகுதிவாசிகளை மீட்கும்   ஜப்பான் ராணுவப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவனின் தாய் அஸ்லின் அவனை துடைப்பத்தால் பலமுறை அடித்ததில் அவனது முழங்கால் சில்லு இடம் மாறியதையடுத்து, அவன் நொண்டியபடி நடக்க வேண்டியதாயிற்று. மாதிரி படம்: தி நியூ பேப்பர்

12 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு சிறுவன் கொலை; பெற்றோரிடம் விசாரணை

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள வீடுகளில் பெரும்பாலானவை ‘வன நகரமான’ தெங்காவில் அமைந்துள்ளன. படம்: வீவக/ஃபேஸ்புக்

12 Nov 2019

விற்பனைக்கு 8,170 ‘பிடிஓ’ வீடுகள்