சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை புகைமூட்டம் தென்பட்டது. காலை 10 மணியளவில் அது சுகாதாரமற்ற நிலையை எட்டியது.

காற்றில் சேர்ந்துள்ள மாசுத் துகள்களால் இந்தப் புகைமூட்டம் ஏற்பட்டிருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.

இன்று காலை 11 மணியளவில் தீவின் கிழக்குப் பகுதியில் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (PSI) 85 முதல் 102 ஆகப் பதிவாகி இருந்தது.

2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்களின் செறிவு (ஒரு மணி நேரக் கணக்கீடு) 39 முதல் 58க்குள் இருந்தது. தெற்குப் பகுதியில் அது 58 எனப் பதிவானது. இந்த அளவு 55ஐத் தாண்டினால் அது உயர்த்தப்பட்ட நிலையாகக் கருதப்படும்.