ஆசியாவிலேயே மிக அழகான நகரம் சிங்கப்பூர்

உலகிலேயே 11 அழகிய நகரங்களில் ஒன்றாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் செயல்படும் பயண நிறுவனமான ஃபிளைட் நெட்வோர்க் உலகின் ஐம்பது நகரங்களை ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளது.

இதில் சிங்கப்பூர் 11வது இடத்தைப் பிடித்து உலகின் அழகிய நகரமாக முன்னிலைப் பெற்றுள்ளத.

முதல் இடத்தில் பாரிஸ் நகரம் உள்ளது. 

இரண்டாவது, 3வது இடத்தில் நியூயார்க், லண்டன் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்ததாக 18வது இடத்தில் தோக்கியோவும் 24வது இடத்தில் ஹாங்காங்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஹனோய், பேங்காக் போன்ற தென்கிழக்கு ஆசிய நகரங்களும் முறையே 37, 43வது இடத்துக்கு வந்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள பயணச் செய்தியாளர்கள், வலைப் பதிவாளர்கள், பயண முகவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஐம்பது நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.

எந்த நகரம் இயற்கை அழகும் செயற்கை அழகும் சேர்ந்து சிறந்த நகரமாக விளங்குகிறது என்று ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்தவர்கள் சிங்கப்பூரைச் சிறந்த நகரமாகத் தேர்வு செய்துள்ளனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்
நேற்றுக் காலை 9.50 மணிக்கு கோயில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு  நடந்தபின் மூலவர் கும்பாபிஷேகமும் மஹா தீபாராதனையும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தியபின் பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் பெற்றனர். படங்கள்: திமத்தி டேவிட்

காலை 9.50 மணிக்கு கோயில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு நடந்தபின் மூலவர் கும்பாபிஷேகமும் மஹா தீபாராதனையும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தியபின் பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் பெற்றனர். படங்கள்: திமத்தி டேவிட்

15 Dec 2019

மழையைத் தாண்டி மனநிறைவுடன் தரிசனம் பெற்ற பக்தர்கள்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, மேற்கு வங்கத் தலைநகர் கோல்கத்தாவில் நேற்று பேருந்துகளுக்குத் தீவைத்து சாலையை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

15 Dec 2019

வடகிழக்கு இந்தியா செல்லும் வெளிநாட்டினருக்கு பயண அறிவுரை