பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு அளித்த முதல் சிங்கப்பூரருக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டு சிறை

பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு அளித்த முதல் சிங்கப்பூரருக்கு கிட்டத்தட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு அறிக்கைகளை அச்சிட உதவும் வகையில், துருக்கியில் உள்ள ஆடவருக்கு பணம் கொடுத்ததை 36 வயது இம்ரான் காசிம் நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு அறிக்கையை அச்சிட துருக்கியில் உள்ள ஆடவர் ஒருவருக்கு $450 அனுப்பியதாக இம்ரான் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. முகம்மது அல்சையத் அல்மிதான் என்ற நபரிடம் வெஸ்டர்ன் யூனியன் குளோபல் கட்டமைப்பு மூலம் இம்ரான் பணம் அனுப்பியதாக நம்பப்படுகிறது.