தாதியர் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு தேசிய தின அணிவகுப்பில் வீரவணக்கம்

இந்த ஆண்டு சிறு அளவிலான ஏற்பாட்டுடன் இரண்டு பகுதிகளாக நடக்கும் தேசிய தின அணிவகுப் பில் சிங்கப்பூர் ஆயுதப்படை மற்றும் போலிஸ் படையைச் சேர்ந்த சுமார் 300 பேர் பங்கெடுப்பர். அணிவகுப்பின் முதல் ஒத்திகை இன்று நடந்தது. அதில் பல புதிய அம்சங்களைக் காண முடிந்தது. கொவிட்-19 சூழலில் செயல்பட்ட முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு வீரவணக்கம் செலுத்தப்படும். பீரங்கி முழக்கத்துடன் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக பாடாங்கில் இடம்பெறும்.

தேசிய தினம் நாடெங்கும் கொண்டாடப்படுவதைக் குறிக்கும் வகையில் பாடாங்கில் தேசிய கொடி ஏற்றப்படும் அதே நேரத்தில் நாடு முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு சிறிய அளவில் இருந் தாலும் கண்ணியமானதாக இருக் கும் என்று ஏற்பாட்டுக் குழு நம்பு கிறது. சென்ற ஆண்டு அணிவகுப் பில் 38 அணிகள் அணிவகுத்துச் சென்றன. ஆனால் இந்த ஆண்டு 4 அணிகள் மட்டுமே அணிவகுத் துச் செல்லும். கொவிட்-19 காரணமாக அணிவகுப்பு வீரர்களுக்கு இடை யில் இடைவெளி வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று இந்த ஆண்டிற்கான அணிவகுப்புத் தள பதி லெஃப்டினென்ட் கர்னல் நிக்க லஸ் ஓங் தெரிவித்தார். முகக்கவசம் அணிந்தபடி அவர் அணிவகுப்பு தளபத்திய கட்டளை களைப் பிறப்பிப்பார்.