சமூக அளவில் இருவருக்கும் வெளிநாட்டில் 15 பேருக்கும் கொரோனா

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 469 பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. சமூக அளவில் இருவர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், மற்றொருவர் வேலை அட்டைதாரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட 15 பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.