‘கருணையைப் பொறுத்தவரை யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை’

கரு­ணை­யைப் பொறுத்­த ­வ­ரை­யில் தனக்கு ஏக­போக உரிமை இருக்­கிறது என்று யாருமே அனுமானித்துக்­ கொள்­ளக் கூடாது என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

குறைந்­த­பட்ச சம்­ப­ளம், கொள்கை உரு­வாக்­கம் ஆகி­யவை பற்றி பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர் இணை பேரா­சி­ரி­யர் ஜேமஸ் லிம் தெரி­வித்த கருத்­து­களை நிரா­க­ரித்து விளக்­கம் அளித்­த­போது திரு தர்­மன் அவ்­வாறு கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் செங்­காங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் பேரா­சி­ரி­யர் லிம் முதன்­மு­த­லாக நேற்று உரை­யாற்­றி­னார். கொள்­கை­களை உரு­வாக்­கும்­போது பல­வற்­றை­யும் சீர்­தூக்­கிப் பார்த்து அதிக கரு­ணை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அவர் கோரிக்கை விடுத்­தார்.

அத­னைத் தொடர்ந்து அவ­ருக்­கும் மக்­கள் செயல் கட்­சி­யைச் சேர்ந்த ஏழு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யில் விவா­தம் நடந்­தது. அப்­போது தலை­யிட்ட திரு தர்­மன் மேற்­கண்­ட­வாறு விளக்­கம் அளித்­தார்.

கடந்த சில நாட்­க­ளாக மக்­கள் செயல் கட்சி உறுப்­பி­னர்­கள் பல­ரும் மன்­றத்­தில் ஆற்றி வரும் உரை தம்மை கவர்ந்து விட்­ட­தாக திரு தர்­மன் கூறி­னார்.

அப்­போது பேசிய திரு தர்­மன், கரு­ணை­யைப் பொறுத்தவரை­யில் யாருக்­குமே ஏக­போக உரிமை என்­பது கிடை­யாது. யாரும் அத்­த­கைய உரிமை தனக்கு இருப்­ப­தாக அனு­மா­னித்­துக்­கொள்­ள­வும் கூடாது என்று குறிப்­பிட்­டார்.

அர­சாங்­கம் ஆற்­ற­லில்­தான் கவ­னம் செலுத்­து­கிறது. சமத்­து­வத்தை சாதிப்­ப­தில் அது கவ­னம் செலுத்­து­வ­தில்லை என்­பவை போன்ற அர்த்­த­மில்­லாத வாதங்­க­ளைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று பேரா­சி­ரி­யர் லிம்­முக்கு திரு தர்­மன் அறி­வுரை கூறி­னார். சிங்­கப்­பூ­ரில் குறைந்­த­பட்ச சம்­ப­ளம் ஒன்றை அமல்­ப­டுத்த வேண்­டும் என்று பேரா­சி­ரி­யர் லிம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

‘படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முன்­மா­திரி’ என்ற ஏற்­பாடு இப்­போது நடப்­பில் இருக்­கிறது. இந்த ஏற்­பாட்­டில் குறை­பா­டு­கள் இருப்­ப­தா­கக் கூறிய பேரா­சி­ரி­யர் லிம், அத்­த­கைய ஏற்­பாடு எல்­லா­ருக்­கும் பொது­வா­ன­தாக அல்­லா­மல் குறிப்­பிட்ட துறை­க­ளுக்கு மட்­டுமே பொருந்­து­வ­தாக இருக்­கிறது என்­றார்.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு தர்­மன், ஆகக் குறை­வா­கச் சம்­ப­ளம் பெறும் ஊழி­யர்­க­ளின் ஊதி­யத்தை உயர்த்த வேண்­டி­யது முக்­கி­யம் என்று அர­சாங்­கம் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

கடந்த 10 ஆண்­டு­க­ளி­லும் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளி­லும் இதில் கணி­ச­மான முத­லீடு சாதிக்­கப்­பட்டு இருக்­கிறது என்று குறிப்­பிட்ட திரு தர்­மன், இதில் மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்­டும் என்று தாங்­கள் கரு­து­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முன்­மா­தி­ரிக்­கும் குறைந்­த­பட்ச சம்­பள ஏற்­பாட்­டிற்­கும் இடை­யில் காணப்­படும் வேறு­பா­டு­களை பிரம்­மாண்ட முறை­யில் மிகைப்­ப­டுத்­தக் கூடாது என்று அவர் பேரா­சி­ரி­யர் லிம்­மி­டம் குறிப்­பிட்­டார்.

ஏழை­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­து­வது என்­பது சிக்­க­லான நடை­முறை என்­ப­தைச் சுட்­டிய அவர், ஊழி­யர் ஒரு­வர் பெரு­மைப்­ப­டத்­தக்க வேலை­யைப் பெற்று ஊதி­யத்தை ஈட்­டு­வ­தற்­கான ஆற்­றலை இழந்­து­வி­டாத வகை­யில் இந்த விவ­கா­ரத்தை எப்­படி சாதிப்­பது என்­பது ஒரு பிரச்­சினை என்று தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முன்­மா­திரி, ஊழி­யர் அணிக்­கான மானி­யங்­கள் மற்­றும் இதர பல வழி­க­ளு­டன் சிங்­கப்­பூர் பல­வற்­றைச் செய்து வரு­கிறது என்று கூறிய அவர், இதில் இன்­னும் பல­வற்­றைச் செய்ய வேண்டி இருக்­கிறது என்­றார்.

சமத்­துவ சரி­சம நிலைக்­கும் ஆற்­ற­லுக்­கும் இடைப்­பட்ட சம­ர­சம் தொடர்­பில் தான் பேசி­ய­போது அர்த்­த­மற்ற விவா­தங்­களில் ஈடு­ப­ட­வில்லை என்­றும் பேரா­சி­ரி­யர் லிம் குறிப்­பிட்­டார்.

ஆற்­ற­லை­விட சமத்­து­வத்­துக்கு ஆத­ர­வான திசை­யில் சிங்­கப்­பூர் மேலும் முன்­னேற்­ற­ம­டைய முடி­யும் என்­ப­து­தான் தனது வாதம் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!