கொவிட்-19 : பாதுகாப்பான, வசதியான பரிசோதனை

கொவிட்-19 தொடர்­பி­லான நாசித்­ தி­ர­வச் சோத­னையை எளி­தாக மேற்­கொள்ள மருத்­து­வ நிபுணர்­கள் தானி­யக்க இயந்­தி­ர மனிதனை (ரோபோட்) உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். அதன் மூலம் நாசித் ­தி­ர­வப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளும் நோயா­ளி­கள் பாது­காப்­பான, வச­தி­யான முறை­யில் விரை­வாக சோத­னையை முடித்­துக்­கொள்­ள­லாம் என்­றும் மருத்­து­வர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

இது­போன்ற இயந்­தி­ர மனிதனை மற்ற நாடு­களும் உரு­வாக்­கி­யி­ருந்­தா­லும், சிங்­கப்­பூ­ரில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த இயந்­தி­ரம், நோயா­ளியே தனது வச­திக்­கேற்ப கையா­ளும் ஆற்­ற­லைப் பெற்­றுள்­ளது. நோயாளி ஒரு­வர் எவ்­வாறு கண் பரி­சோ­தனை இயந்­தி­ரத்­தின் முன் அமர்­கி­றாரோ அவ்­வாறே ‘சுவாப்­போட்’ என்று அழைக்­கப்­படும் இந்த இயந்­தி­ரத்­தின் முன் அமர்­கி­றார்.

பின்­னர் இயந்­தி­ரத்­தில் உள்ள கைப்­பி­டி­களை இரு கைக­ளா­லும் பிடித்­துக்­கொள்­கி­றார். பிறகு தனது மூக்­குத் துவா­ரத்தை இயந்­தி­ரத்­தில் உள்ள பகு­தி­யில் அழுத்­து­வார். அவர் தயா­ரா­ன­தும், அவர் தனது தாடை­யைக் கொண்டு பொத்­தானை அழுத்தி இயந்­தி­ரத்தை இயக்­கு­வார்.

பொது­வாக மூக்­குத் துவா­ரத்­துக்­கும் மூக்­கின் அடிப்­ப­கு­திக்­கும் இடையே உள்ள தூரம் 10 செண்­டி­மீட்­டர். மூக்­குத் துவா­ரத்­துக்­குள் சோத­னைக் குச்சி செல்­லும்­போது ஏதே­னும் அசைவு உண­ரப்­பட்­டால், இயந்­தி­ரம் சோத­னைக் குச்­சியை மூக்­குத் துவா­ரத்­தி­லி­ருந்து வெளியே எடுத்­து­வி­டும். அப்­போது நோயாளி இயந்­தி­ரத்­தி­லி­ருந்து தலையை அகற்றி சோத­னையை முடித்­துக்­கொள்­ள­லாம்.

முழுப் பரி­சோ­த­னை­யும் 20 வினா­டி­க­ளுக்­குள் முடி­வ­டைந்து விடும். ஒப்­பு­நோக்க முன்பு மேற்­கொள்­ளப்­பட்ட நாசித்­தி­ர­வச் சோதனை இரு மடங்கு நேரம் பிடிக்­கும். பரி­சோ­தனை முடிந்­த­வு­டன், மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் இயந்­தி­ரத்­துக்­குள் இருக்­கும் சோத­னைக் குச்­சியை அகற்­று­வார்­கள். பின்­னர் இந்த இயந்­தி­ரத்­தின் உள்­ப­குதி உட்­பட அனைத்து இடங்­களும் கிரு­மி­நா­சினி திர­வத்­தால் சுத்­தம் செய்­யப்­பட்டு, பிளாஸ்­டிக் தாளால் மூடப்­பட்டு, அதன் மூக்­குப் பகுதி மட்­டும் அடுத்த பரி­சோ­த­னைக்­குத் தயார்ப்­ப­டுத்­தப்­படும்.

35 செண்­டி­மீட்­டர் நீளம், 40 செண்­டி­மீட்­டர் அக­லம், 49 செண்­டி­மீட்­டர் உய­ரம் கொண்ட இந்த இயந்­தி­ரத்தை சிங்­கப்­பூர் புற்­று­நோய் சிகிச்சை நிலை­யம், சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை ஆகி­யவை இணைந்து ‘பையோ­போட் சர்­ஜிக்­கல்’ எனும் நிறு­வ­னத்­தின் ஒத்­து­ழைப்­பு­டன் உரு­வாக்­கின.

“கொவிட்-19 பரி­சோ­த­னை­யின் போது கிரு­மித்­தொற்று சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­பைக் குறைக்க வழி கண்­டு­பி­டிக்க வேண்­டும் என்று எங்­கள் குழு எண்­ணி­யது. பரி­சோ­த­னை­யின்­போது நோயாளி தும்­மக்­கூ­டும் அல்­லது இரு­மக்­கூ­டும். அப்­போது அரு­கில் உள்ள சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் ஆபத்து உண்டு,” என்­றார் சிங்­கப்­பூர் புற்­று­நோய் சிகிச்சை நிலை­யத்­தின் தலை, கழுத்து அறுவை சிகிச்­சைப் பிரி­வின் இணை மருத்­துவ ஆலோ­ச­கர் ரெனா தர்­ம­வான்.

இது­வரை சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை மற்­றும் பிரைட் விஷன் மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றின் 85 நோயா­ளி­களும் தொண்­டூ­ழி­யர்­களும் இந்த இயந்­தி­ரத்­தில் பரி­சோ­தனை செய்துகொண்­ட­னர். அவர்­கள் அனை­வ­ரும் இந்த இயந்­தி­ரத்­தில் பரு­சோ­தனை செய்­து­கொள்­வது எளி­தாக உள்­ளது என்று கூறி­னர்.

இவ்­வாண்டு ஏப்­ர­லில் தொடங்­கப்­பட்ட இயந்­திர மனிதன் உரு­வாக்­கப் பணி மூன்று மாதங்­களில் நிறைவு பெற்­றது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!