‘வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 பரிசோதனை நிலையங்கள் அதிகரிக்கப்படும்; 35,000 ஊழியர்கள் பலனடைவர்'

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழக்கமான சளி/எச்சில் மாதிரி ‘ஸ்வாப்’ பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கில், அதிக எண்ணிக்கையில் விடுதிகளுக்குள்ளேயே பரிசோதனை வசதிகள், வட்டார பரிசோதனை நிலையங்கள் ஆகியவை இவ்வாண்டு இறுதிக்குள் அமைக்கப்படும்.

விடுதிகளில் தற்போது 24 அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனை (RRT) வசதிகள் உள்ளன. இம்மாத இறுதிக்குள் இன்னும் 9 அமைக்கப்படும் என மனிதவள அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை இன்று (அக்டோபர் 8) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

பரிசோதனை வசதிகளை அதிகரிப்பதன் மூலம் 35,000க்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவர்.

பகலில் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், புக்கிட் பாத்தோக்கில் இருக்கும் அகாசியா லாட்ஜ், கேசியா@பெஞ்சுரு, பௌண்டரி குளோசில் இருக்கும் மத்திய ஊழியர் குடியிருப்புகள், மண்டாய் எஸ்டேட்டில் இருக்கும் வெஸ்ட்லைட் மண்டாய் ஆகிய இரவுநேர பரிசோதனை வசதிகளில் பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

ஊழியர்களுக்கான வழக்கமான பரிசோதனை நேரத்தை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் உள்ள பரிசோதனை வசதிகளில் அல்லது தீவு முழுவதும் இருக்கும் 20ல் 14 வட்டார பரிசோதனை நிலையங்களிலோ முன்பதிவு செய்துகொள்ள இயலும்.

இவ்வாண்டு இறுதிக்குள் கூடுதலாக 25 முதல் 30 வரையிலான பரிசோதனை நிலையங்களை அமைக்க சுகாதார மேம்பாட்டு வாரியம் திட்டமிடுகிறது. இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு வசதிகளில் அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கிருமித்தொற்றை கூடிய விரைவில் கண்டுபிடிக்கும் நோக்கில், விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் விடுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் விடுதிகளில் 2,600க்கும் அதிகமானோர் பணியில் உள்ளனர்.

விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள், கட்டுமானத் துறை, கப்பல் பட்டறை, பதனீடு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு 14 வட்டார பரிசோதனை நிலையங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவை தி ஃபுளோட்@மரினா பே, பழைய போலிஸ் அகாடமி, சிங்கப்பூர் டர்ஃப் கிளப் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனைகளை ஊழியர்கள் மேற்கொள்வதை உறுதி செய்வது மிக முக்கியம் என சுகாதாரப் பராமரிப்பு வாரியமும் மனிதவள அமைச்சும் வலியுறுத்தின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!