ஐந்து வட்டாரங்களில் 5,700க்கும் மேற்பட்ட பிடிஓ வீடுகள் விற்பனை

இவ்வாண்டுக்கான இறுதி விற்பனைத் திட்டத்தின்கீழ் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) 5,795 தேவைக்கு ஏற்பக் கட்டித் தரப்படும் (பிடிஓ) வீடுகள், விற்பனைக்கு வந்துள்ளன.

ஐந்து குடியிருப்பு வட்டாரங்களில் அமைந்துள்ள ஏழு வீடமைப்புத் திட்டங்கள் மூலம் இந்த பிடிஓ வீடுகள் விற்கப்படுகின்றன.

இவற்றில் ‘பீஷான் ரிஜர்ஸ்’ திட்டமே ஆகப் பெரியது. அதில் ஈரறை, மூவறை, நான்கறை வீடுகள் என மொத்தம் 1,502 வீடுகள் இங்கு விற்பனைக்கு உள்ளன.

காலாங் ஆறு அருகே பீஷான் ஸ்திரிட் 14ல் அமைந்துள்ள இத்திட்டத்துக்கான இடம், பீஷான் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

மானியங்களின்றி மூவறை வீட்டு விலை 374,000 வெள்ளியிலிருந்து தொடங்குவதாகவும் நான்கறை வீட்டு விலை 528,000 வெள்ளியிலிருந்து தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தோ பாயோ (பிடாடாரி) வட்டாரத்தில் இரண்டு பிடிஓ திட்டங்கள் அமைந்திருக்கும். உட்லீ எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் ஒரு திட்டமும் பார்ட்லி எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் இன்னொரு திட்டமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வாண்டின் முதல் ‘மீதியிருக்கும் வீடுகளின் விற்பனை’ திட்டத்தின் கீழ் மேலும் 5,220 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மரின் பரேட், குவின்ஸ்டவுன், கிளமெண்டி, பொங்கோல், செங்காங் போன்ற வட்டாரங்களில் இவ்வீடுகள் அமைந்துள்ளன. விண்ணப்பம் செய்வதற்கு இறுதி நாள் நவம்பர் 23ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவல் அறிந்து வீவக இணையப்பக்கத்தை அதிக எண்ணிக்கையிலானோர் இன்று பயன்படுத்தினர்.

வீடுகளுக்காக பதிவு செய்வதற்காக நிர்வாகக் கட்டணம் கட்டுவதில் பலரும் சிரமத்தை எதிர்நோக்கினர். சிலரால் கட்டணம் செலுத்த முடியவில்லை. கட்டணம் சென்று சேர்ந்திருக்குமா என்று சிலரால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் சுமார் 30 பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவாகின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!