அமைச்சர் சான்: முழுமையாக மீட்சி அடைய நீண்டகாலம் பிடிக்கும்

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மீட்சிப் பாதையில் இப்­போ­து­ தான் திரும்பி இருக்­கிறது. மீட்­சி பெற அது நீண்டதூரம் செல்ல வேண்டி இருக்­கும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று தெரி­வித்­தார்.

இந்த ஆண்­டின் 3வது காலாண்­டில் பொரு­ளி­யல் மேம்­பட்டு இருக்­கிறது. இது சிங்­கப்­பூர் சரி­யான பாதை­யில் முன்­னேறி வரு­கிறது என்­ப­தைக் காட்டு ­வ­தாக அமைச்­சர் கூறி­னார்.

மெய்­நி­கர் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய அமைச்­சர், உள்­ளூ­ரி­லும் உல­க­ள­வி­லும் பொரு­ளி­யல் மீட்­சி­யின் வேகத்தை பாதிக்­கக்­கூ­டிய நான்கு அம்­சங்­களைக் கோடி­காட்­டி­னார்.

அந்த அம்­சங்­களில் இரண்டு அம்­சங்­கள், சிங்­கப்­பூ­ரின் கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 தொற்று விகி­த­மும் கிரு­மித்­தொற்று சூழ்ந்­துள்ள இந்த உல­கில் நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் நிலை­மைக்கு ஏற்ப மாறிக்­கொண்டு மேம்­படும் ஆற்­ற­லும் சிங்கப்­பூ­ரின் கட்­டுப்­பாட்­டின் கீழ் இருக்­கும் அம்­சங்­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

அமெ­ரிக்கா, சீனா இரு நாடு­க­ளுக்கு இடைப்­பட்ட அர­சி­யல் நில­வ­ரங்­களும் உல­க­ள­வில் கொவிட்-19 தொற்று மீண்டும் ஏற்­ப­டு­வ­தும் சிங்­கப்­பூர் கட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்ட இரண்டு அம்­சங்­கள் என்­றார் அவர்.

நம் கட்­டுப்­பாட்­டில் உள்ள அம்­சங்­களைத் திறம்­பட சமா­ளித்து, நமக்கு அப்­பாற்­பட்ட அம்­சங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­களை கடந்து வந்­து­விடுவோ­மா­னால் நம்­மு­டைய பொரு­ளி­யல் மீட்சி வேக­மாக இருக்­கும் என்று நம்­பு­வ­தா­க­வும் திரு சான் கூறி­னார்.

அர­சாங்­கத்­தின் ஆத­ரவு திட்­டங்­களைப் பற்றி கருத்­து­ரைத்த வர்த்தக தொழில் அமைச்­சர், வருங்­கா­லத்­தில் அந்த ஆத­ரவு நம்­மு­டைய நிறு­வ­னங்­கள் மற்­றும் ஊழி­யர்­க­ளின் ஆக்­க­க­ர­மான பலன்­க­ளின் மீது ஒரு­மித்த கவனம் செலுத்­து­வ­தா­க­வும் அதை இலக்­காக வைத்தே செயல்­படு­வ­தா­க­வும் இருக்க வேண்­டும் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!