தற்காப்பு உறவை மறுஉறுதி செய்த சிங்கப்பூர்-இந்தியா

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடை­யி­லான வலு­வான, நீண்­ட­கால நல்­லு­றவை இரு­நாட்­டுத் தற்­காப்பு அமைச்­சர்­களும் மறு­உ­றுதி செய்­து­கொண்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென்­னும் இந்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங்­கும் ஐந்­தா­வது இந்­திய-சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சர்­க­ளுக்கு இடை­யிலான இணை­யம்­வழி கலந்­து­ரை­யா­ட­லில் நேற்று முன்­தி­னம் பங்­கேற்­ற­னர்.

இரு நாட்டு கடற்­ப­டை­க­ளுக்கு இடையே நீர்­மூழ்­கிக் கப்­பல் மீட்பு ஆத­ரவு, ஒத்­து­ழைப்­புக்­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தி­டப்­ப­டு­வ­தை­யும் இரு தற்­காப்பு அமைச்­சர்­களும் பார்­வை­யிட்­ட­னர்.

இரு­த­ரப்பு தற்­காப்பு ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளை­யும் அவர்­கள் வர­வேற்­ற­னர். மனி­தா­பி­மான உதவி, பேரி­டர் நிவா­ரண ஒத்­து­ழைப்பு பற்­றிய செயல்­பாட்டு உடன்­பா­டும் அவற்­றில் அடங்­கும்.

இரு நாட்டு ஆயு­தப் படை­களின் இணை­யப் பாது­காப்பு அமைப்­பு­களும் அவற்­றுக்கு இடை­யி­லான தொடர்­பு­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளன.

தற்­காப்பு, பாது­காப்பு ஏற்­பா­டு­கள் மீது கொவிட்-19 நோய்ப்­ பரவல் சூழல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கம் குறித்­தும் இரு அமைச்­சர்­களும் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

கொவிட்-19 சூழல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லும் இரு­த­ரப்பு தற்­காப்பு ஒத்­து­ழைப்­பைத் தொடர்­வ­தற்கு இரு அமைச்­சர்­களும் கடப்­பாடு தெரி­வித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் நோய்ப்­ ப­ர­வல் உச்­சத்தை எட்­டி­ய­போது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் பங்­காற்­றி­ய­தற்கு திரு ராஜ்­நாத் சிங் நன்றி கூறி­னார். சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் பல­ரும் இந்­திய நாட்­ட­வர்­க­ளாக உள்­ள­னர்.

இந்­தி­யா­வில் புவி­யி­யல், மக்­கள்­தொ­கை­யில் பல்­வேறு சவால்­கள் இருந்­த­போ­தும் அந்­நாடு கிரு­மித்­தொற்றை வெற்­றி­க­ர­மாக கட்­டுக்­குள் கொண்டு வந்­தி­ருப்­பதை டாக்டர் இங் பாராட்­டி­னார்.

தற்­போ­தைய நோய்ப் ­ப­ர­வல் சூழ­லில் மெய்­நி­கர் சந்­திப்­பு­களை நடத்­து­வ­தன் மூலம் வரு­டாந்­திர கலந்­து­ரை­யா­டல்­க­ளைத் தொடர்­வதில் மூத்த அதி­கா­ரி­கள் கடப்பாடு கொண்­டி­ருப்­பதை இரு அமைச்­சர்­களும் சுட்­டி­னர்.

இவ்­வாண்டு இரு­த­ரப்­புக்­கும் இடையே கூடு­தல் ஒத்­து­ழைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் இது அடித்­த­ள­மாக அமை­கிறது.

இரு நாட்டு கடற்­ப­டை­களும் 27வது சிங்­கப்­பூர்-இந்­தியா கடற்­துறை இரு­த­ரப்பு பயிற்சி நட­வ­டிக்­கையை வெற்­றி­க­ர­மாக முடித்து இருப்­பது குறித்து இரு அமைச்­சர்­களும் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர்.

இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே தற்­காப்பு உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த கடப்­பாடு தெரி­வித்த இரு அமைச்­சர்­கள், இவ்வட்­டா­ரத்­தில் அமை­தி­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் ஊக்­கு­விப்­பதற்­கான முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வு அளித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!