பிரதமர் லீ: பொருளியல் இவ்வாண்டு மீள முடியும்

கொவிட்-19 சூழல் கார­ண­மாக சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் கடந்த ஆண்டு பெரி­தும் பாதிப்பு அடைந்ததைத் தொடர்ந்து, பொரு­ளி­யலின் பெரும்­ப­குதி இவ்­வாண்டு மீட்­சி­ய­டைய முடி­யும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், பொரு­ளி­யல் மீட்சி ஏற்ற இறக்­க­மாக இருக்­கும் என்று கூறிய அவர், விமா­னப் போக்­கு­வ­ரத்து, கட்­டு­மா­னம், சுற்றுப்­ப­ய­ணம் போன்ற துறை­கள் மீட்­சி­ய­டைய காலம் எடுக்­கும் என்­றார்.

சீனப் புத்­தாண்­டின் முதல் நாளான நேற்று முன்­தி­னம் அத்­தி­யா­வ­சிய சேவைத் துறை­யில் பணி­யாற்­றும் ஊழி­யர்­க­ளைச் சந்தித்த பின்­னர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசி­ய­போது திரு லீ மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

“கடந்த ஆண்டு கொவிட்-19 நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­தால் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் மீது அது பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது,” என்­றார் அவர்.

பொரு­ளி­யல் இவ்­வாண்டு சிறப்­பா­கச் செய்­யக்­கூ­டும் என்­றா­லும், நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய நிலை­யை­விட அது சிறப்­பா­கச் செய்ய முடி­யுமா என்­பதை உறு­தி­யா­கக் கூற இய­லாது என்று அவர் சொன்­னார்.

இவ்­வாண்டு பொரு­ளி­யல் 4 முதல் 6 விழுக்­காடு வரை விரி­வ­டை­யும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது. கடந்த ஆண்டு அது முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வாக 5.8 விழுக்­காடு சுருங்­கி­யது.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மீட்சி, நாட்­டின் மக்­கள்­தொ­கைக்­குத் தடுப்­பூசி போடும் பணி­க­ளின் முன்­னேற்­றத்­தை­யும் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­க­ளின் தடுப்­பூ­சித் திட்­டங்­க­ளின் முன்­னேற்­றத்­தை­யும் சார்ந்­தி­ருப்­ப­தாக பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார். இந்த நாடு­கள் தங்­க­ளது தடுப்­பூ­சித் திட்­டங்­களில் முன்­னேற்­றம் அடைந்­த­வு­டன் அவற்­றின் பொரு­ளி­யல் மீட்­சி­ய­டைய முடி­யும் என்­ப­தால் சிங்­கப்­பூ­ரால் வழக்­க­நி­லையை நெருங்க முடி­யும் என்­பதை அவர் சுட்­டி­னார்.

நேற்று முன்­தி­னம் காலை தமது துணை­வி­யா­ரு­டன் திரு லீ, சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) விமானச் சிப்­பந்தி கட்­டுப்­பாட்டு மையத்­திற்­குச் சென்­றார். லண்­டன், மணிலா நக­ரங்­க­ளுக்­குச் செல்­ல­வி­ருந்த எஸ்­ஐஏ விமா­னச் சிப்­பந்­தி­கள், விமா­னி­கள், ஆத­ரவுப் பணி­யா­ளர்­கள் ஆகி­யோரை திரு லீ சந்­தித்­தார். போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) தலை­வர் மேரி லியூ, என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங், தொழிற்­சங்­கத் தலை­வர்­கள் ஆகி­யோர் உட­னி­ருந்­த­னர்.

பின்­னர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குச் சென்ற பிர­த­மர் லீ, அங்கு மருத்­து­வர்­கள், தாதி­யர் போன்ற சுகா­தா­ரப் பணி­யா­ளர்­களைச் சந்­தித்து அவர்­க­ளுக்கு சிவப்பு அன்­ப­ளிப்­பு பாக்­கெட்­டு­கள், மாண்­ட­ரின் ஆரஞ்­சுப் பழங்­கள் உள்­ளிட்ட அன்­ப­ளிப்­பு­களை வழங்கி சீனப் புத்­தாண்டு வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

கொவிட்-19 கட்­டுப்­பாட்டு நட­வடிக்­கை­க­ளுக்கு பல்­வேறு தொழில்­து­றை­க­ளால் ஈடு­கொ­டுக்க முடி­யுமா என்று செய்­தி­யா­ளர் ஒரு­வர் கேட்­ட­தற்கு, மற்­றொரு முடக்­க­நி­லை­யைத் தவிர்க்க அர­சாங்­கம் கடி­ன­மாக முயற்சி செய்­யும் என்று திரு லீ பதி­ல­ளித்­தார்.

“நாம் மீண்­டும் முடக்­கத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தால், அது பெரிய பாதிப்பை ஏற்­படுத்­தும்,” என்­றார் அவர்.

ஊழி­யர்­க­ளுக்­குத் திறன் பயற்சி வழங்­கு­வ­தை­யும் நிறு­வ­னங்­கள் அவற்­றின் ஆற்­றல்­களை வலுப்­படுத்­து­வ­தை­யும் அர­சாங்கம் உறுதி­செய்­து வருவ­தாக திரு லீ சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!