விதிமீறிய 6,900 பேருக்கு அபராதம்

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை மீறியோர் பிடிபட்டனர். கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் டிசம்­பர் வரை கொவிட்-19 பாது­காப்பு நடை­மு­றை­களை மீறி­ய­தற்­காக 6,900க்கும் அதி­க­மான பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இதே கால­கட்­டத்­தில் முகக்­கவசங்­களை அணி­யா­த 1,700க்கு அதி­க­மானோருக்கும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தாக சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு நேற்று முன்­தி­னம் கூறி­யது.

பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­களை முதன்­மு­றை­யாக மீறு­வோ­ருக்கு $300 அப­ரா­த­மும் இரண்­டா­வது முறை­யாக குற்­றம் புரி­வோ­ருக்கு $1,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டு­கிறது.

பாது­காப்பு நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றத் தவ­றி­யோர் செலுத்­திய மொத்த அப­ரா­தம் குறைந்­தது $2 மில்­லி­ய­னாக இருக்­கும். முகக்­கவசம் அணி­யா­தோ­ரி­டம் இருந்து பெறப்­பட்ட அப­ரா­தத் தொகை குறைந்­தது $510,000 என அமைச்சு தெரிவித்தது.

அனு­ம­திக்­கப்­பட்ட அள­வை­விட பெரிய எண்­ணிக்­கை­யில் ஒன்­று­கூ­டி­யதே ஆக அதி­க­மாக மீறப்­பட்ட கொவிட்-19 பாது­காப்பு நடை­மு­றை­களில் ஒன்று என்று அமைச்சு கூறி­யது.

“கொவிட்-19 நோய்ப் பர­வல் கடு­மை­யான மிரட்­ட­லாக தொடர்­கிறது. இதற்கு எதி­ரான போராட்­டத்­தில் நாம் மெத்­த­ன­மா­கி­வி­டக்­கூ­டாது,” என்று அமைச்சு எச்­ச­ரித்­தது.

கொவிட்-19 கட்­டுப்­பாட்டு நட­வடிக்­கை­க­ளைத் தளர்த்­து­வது குறித்து கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று முன்­தி­னம் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

கொவிட்-19 அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு அறி­வித்­தி­ருந்த கட்டுப்­பா­டு­க­ளைத் தொடர்ந்து கடைப்­பி­டிக்­கு­மாறு நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு பொது­மக்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

“சமூ­கத்­தில் நோய்த்­தொற்று எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரிக்­கா­மல் இருக்க நாம் அனை­வ­ரும் கொவிட்-19 பாது­காப்பு நடை­முறை­க­ளுக்கு உட்­பட்டு நடக்க வேண்­டும். தொற்று மீண்­டும் அதி­க­ரித்­தால் அது வாழ்­வை­யும் வாழ்­வா­தா­ரத்­தை­யும் பெரு­ம­ளவு பாதித்­து­வி­டும்.

“உணவு, பானக் கடை­கள், கடைத்­தொ­கு­தி­கள், பூங்­காக்­கள், கடற்­க­ரை­கள் போன்ற அதிக கூட்­டம் காணப்­படும் இடங்­களில் அம­லாக்­கப் பணி­களை அதி­கா­ரி­கள் தொடர்ந்து தீவி­ரப்­ப­டுத்­து­வர்,” என்று அமைச்சு கூறி­யது.

இதற்­கி­டையே, நிறு­வ­னங்­கள் பாது­காப்பு நடை­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடப்­பதை உறு­தி­செய்ய வேலை­யி­டங்­களை மனி­த­வள அமைச்சு அவ்­வப்­போது சோத­னை­யிட்டு வரு­கிறது.

வேலை­யிட பாது­காப்பு நடை­மு­றை­களை மீறி­ய­தற்­காக கிட்­டத்­தட்ட 140 நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­களை நிறுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­கத் தவ­றிய 280க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­க­ளுக்கு மனி­த­வள அமைச்சு அப­ரா­தம் விதித்­தது.

சிங்­கப்­பூர் தேசிய காட்­சிக்­கூடத்­தில் இயங்­கும் ‘கெம்மா ஸ்டீக்­ஹ­வுஸ்’ எனும் உண­வ­கத்­தில் கடந்த ஆண்டு அக்­டோ­பர் 31ஆம் தேதி ஆக அதி­க­மாக ஏறத்­தாழ 75 பேர் ஒன்­று­கூ­டி­ய­தாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு கூறி­யது.

அந்த உண­வ­கத்­தில் பாது­காப்பு நடை­மு­றை­அத்­து­மீ­றல் குறித்து விசா­ரணை தொடர்­கிறது.

வெவ்­வேறு மேசை­களில் அமர்ந்­தி­ருந்த வாடிக்­கை­யா­ளர்­கள் ஒரு­வ­ரோடு ஒரு­வர் கலந்­து­ரை­யா­டி­யது தெரிய வந்­த­தைத் தொடர்ந்து அந்த உண­வ­கத்தை 20 நாட்­க­ளுக்கு மூட உத்­த­ர­விடப்­பட்­ட­தாக கடந்த டிசம்­ப­ரில் வெளி­யி­டப்­பட்ட செய்­தி­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!